வாக் அவுட்-டா? எலிமினேஷனா? நமீதா மாயமான பின்னணி என்ன?

நமீதா பிக் பாஸ் வீட்டை விட்டு வாக் அவுட் செய்திருக்கிறாரா? அல்லது எலிமினேஷனன் செய்யப்பட்டுள்ளாரா? நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்து மாயமான பின்னணி என்ன என்று ஆடியன்ஸ் கேள்விகள் பிக் பாஸை நோக்கி எழுகின்றன.

bigg boss tamil 5, bigg boss walk out, bigg boss tamil 5, bigg boss, vijay tv, namitha marimuthu walk out, பிக் பாஸ் 5, பிக் பாஸ், விஜய் டிவி, நமீதா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து, திருநங்கை மாரிமுத்து, கமல்ஹாசன், namitha elimination, kamal haasan, bigg boss contestant namitha, namitha transgender

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போதே நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்று அறிவிப்புடன் தொடங்கியது. அதனால், நமீதா ஏன் வெளியேறினார் என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பிரபலம் இல்லாத பல புதுமுகங்கள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கெனவே, ஊடகங்கள் சினிமா வழியாக பிரபலமான சின்னபொண்ணு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி, இசைவாணி போன்றவர்களும் உள்ளனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், முதல்வாரத்தில் கமல்ஹாசனின் பஞ்சாயத்து தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று (அக்டோபர் 09) கமல்ஹாசன் வருவதற்கு முன்னதாக பிக் பாஸின் அதிர்ச்சியான அறிவிப்புடன் தொடங்கியது. “பிக் பாஸ் உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார்.” என்று அறிவித்ததும் போட்டியாளர்கள் மட்டுமல்ல ஆடியன்ஸும் அதிர்ச்சியில் அமைதியாகி விட்டார்கள்.

இதனால், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நமீதா மாரிமுத்து ஏன் வெளியேறினார் என்பதற்கான காரணத்தை சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

திருநங்கையான நமீதா மாரிமுத்து தனது சிறுவயதில் எப்படி வீட்டிலும் சமூகத்திலும் அங்கீகரிக்காமல் போனதால் அனுபவத்தி வேதனையையும் வன்முறைகளையும் கூறி மக்களின் மனதில் இடம்பிடித்து இருந்தார்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் தனது கதையை சொன்ன நமீதா மாரிமுத்து, ‘இங்கு இருக்கப் போகும் நூறு நாளும் எங்களின் உரிமைகள் தொடர்பாக இந்தச் சமூகத்தை கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பேன்’ என்று கூறினார். ஆனால், அவர் ஒருவாரத்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பார்வையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், நமீதா ஏன் வெளியெறினார் என்ற கேள்வி எழுவது இயல்பாக அமைந்துவிட்டது.

நமீதா மருத்துவக் காரணங்களுக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், அதுதான் காரணமா என்ற ஐயமும் நிலவுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் அபிமான போட்டியாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிற அதே நேரத்தில், அவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று சொல்லவேண்டியதும் பிக் பாஸின் கடமை. ஆனால், நேற்றைய நிகழ்ச்சி இறுதியிலாவது கமல்ஹாசனோ அல்லது பிக் பாஸோ நமீதா ஏன் வெளியேறினார் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லப்படவே இல்லை. அதனால், இன்றைக்கு (அக்டோபர் 10) நிகழ்ச்சியிலாவது நமீதா ஏன் வெளியேறுவதற்கான தவிர்க்க முடியாத காரணம் என்ன என்று சொல்வார்கள் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முன்னதாக, பிக் பாஸ் வீட்டில், நாடக நடிகை தாமரைச்செல்விக்கும் நமீதா மாரிமுத்துவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தபோது கோபம் அடைந்த நமீதா அசிங்க அசிங்கமா பேசிவிடுவேன் என்று கூறியது போட்டியாளர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்துதான் ஒரே வாரத்தில் நமீதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இதனால், நமீதா பிக் பாஸ் வீட்டை விட்டு வாக் அவுட் செய்திருக்கிறாரா? அல்லது எலிமினேஷனன் செய்யப்பட்டுள்ளாரா? நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்து மாயமான பின்னணி என்ன என்று ஆடியன்ஸ் கேள்விகள் பிக் பாஸை நோக்கி எழுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 5 namitha walk out from bigg boss house what reasons audience questions

Next Story
‘இந்த வீட்டில் எனக்கு அவளைத் தான் புடிக்கும்…’ பிரியங்கா பெயரைச் சொல்லி அழுத அபிஷேக்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com