Bigg Boss Tamil 5 Pavani Reddy Wedding Viral Video : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடக்கம் முதலே வெறும் பாசிட்டிவ் ஃபீட்பேக் மட்டுமே பெற்று வருகிறார் பாவனி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இவர். சமீபத்தில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள இவருடைய திருமண வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல புதிய ரசிகர்களைப் பெற்றுள்ள பாவனி, கடந்த வாரம் வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதைகளைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். அப்போது, திருமணமாகி சிறிது நாட்களிலேயே தன்னுடைய கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதை அடுத்து, அவர் சந்தித்த பிரச்சனைகளைப் பற்றிப் பகிர்ந்துகொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை 2016-ல் டேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார். இந்த ஜோடி நவம்பர் 2016 இறுதியில் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு, 2017 பிப்ரவரி 14 அன்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, மே 2017-ல் பிரதீப் ஹைதராபாத்தில் உள்ள அவர்களுடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பிரதீப் மீது மிகவும் கோபமாக உணர்ந்ததாகப் பவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து, தன் குடும்பம் மறுமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும், தன்னுடைய முதல் திருமணத்திற்கு பிறகு வேறொருவர் தன் வாழ்க்கையில் வந்தார் என்றும், ஆனால் அந்த நபரோடு நீண்ட நாள் உறவு நீடிக்கவில்லை என்றும் பாவனி, இமான் அண்ணாச்சியோடு ஓர் உரையாடலில் குறிப்பிட்டார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பாவனியின் பழைய படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில், பாவனி மற்றும் பிரதீப்பின் திருமண வீடியோ க்ளிப்பிங்கை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், பிரதீப் தனது காதலி பாவனிக்கு தாலி கட்டுவது, மெட்டி போடுவது போன்று காட்சிகள் இருக்கின்றன. மேலும், பிரதீப் அவரை அரவணைத்து மகிழ்ச்சியாக விளையாடுவது காணப்பட்டது. இந்த அழகான ஜோடியின் துரதிர்ஷ்டத்திற்கு ரசிகர்கள் தங்கள் இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil