விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 ஜனவரி 16ம் தேதியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பிக் பாஸ் டைட்டிலை திரைக்கதை எழுத்தாளர், நடிகர் ராஜு ஜெயமோகன் வென்றார். பிரியங்கா 2வது இடத்தைப் பிடித்தார். 3வது இடத்தை பிக் பாஸ் வீட்டில் கனவுக் கன்னியாக வலம் வந்த பாவனி பிடித்தார்.
விஜய் டிவியில் அக்டோபர் 3ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை 105 நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்ற ராஜுவுக்கு ரு. 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் சம்பளத்தைப் பார்த்த நெட்டிசன்கள், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளமாக லட்சங்களைக் கொட்டியுள்ளது என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் டைட்டிலை வென்ற ராஜுவுக்கு ரூ 50 லட்சம் பரிசு தொகையுடன் அவர் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காகவும் சேர்த்து ரூ. 70 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
2வது இடத்தைப் பிடித்த பிரியங்காவுக்கு 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் 3வது இடத்தைப் பிடித்த பாவனிக்கு 20 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும் அமீருக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் நிரூப்பிற்கு 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்களில் 2வது இடத்தைப் பிடித்த பிரியங்காதான் அதிக சம்பளம் பெற்றுள்ளார். பிக் பாஸ் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரியங்கா மீண்டும் விஜய் டிவி ஆங்கராக எப்போது வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“