Bigg Boss Tamil 5: ஹேப்பி நியூஸ்... ஷூட்டிங் தொடங்கியாச்சு! யாரெல்லாம் வருவாங்க?

Bigg Boss Tamil 5 Shooting spot viral photos Tamil News தற்போது அந்த ப்ரோமோ காணொளிக்கான ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Bigg Boss Tamil 5 Shooting spot viral photos Tamil News தற்போது அந்த ப்ரோமோ காணொளிக்கான ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 5 Shooting spot viral photos Tamil News

Bigg Boss Tamil 5 Shooting spot viral photos Tamil News

Bigg Boss Tamil 5 Shooting spot viral photos Tamil News : வருடம் பிறந்தாலே உறுதிமொழி எடுக்கிறோமோ இல்லையோ, அடுத்த பிக் பாஸ் சீசன் எப்போது ஆரம்பமாகும், அதில் யார் வெற்றிபெறுவார்கள் என்கிற டிஸ்கஷன் மட்டும் தவறாமல் இணையத்தில் நடைபெறும். அந்த வரிசையில் பிக் பாஸ் ஐந்தாம் சீசன் பற்றிய விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

Advertisment

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய பிக் பாஸ் ஐந்தாம் சீசன், அக்டோபர் மதத்திற்கு தள்ளி போயிருக்கிறது. என்றாலும், வழக்கம்போல யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள், யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் இணையத்தில் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில், இந்த மாத கடைசியில் ஐந்தாம் சீசனின் டீசர் வெளியாகலாம் என்கிற தகவல் வெளியானதை அடுத்து, தற்போது அந்த ப்ரோமோ காணொளிக்கான ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, சினிமா, சின்னத்திரை, டிஜிட்டல் என பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பிரபலங்களில் யாரெல்லாம் வருவார்கள் என்கிற தீவிர டிஸ்கஷன் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

Advertisment
Advertisements

இம்முறை சிம்பு இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்கிற வதந்திகள் ஒருபுறம் பரவி இருந்தது. ஆனால், அது வெறும் வதந்தி மட்டுமே. இம்முறையும் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். வழக்கம்போல, பல வித்தியாச நுட்பங்களைக் கொண்டு பிரம்மாண்டமான பிக் பாஸ் வீடு தயார் நிலையில் இருப்பதாகவும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: