‘நீதான் நான்சென்ஸ்...’ பிக் பாஸ் வீட்டில்  தினேஷ் - மாயா இடையே கடும் மோதல்: வீடியோ

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான தினேஷ் - மாயா இருவரும் ‘நீதான் நான்சென்ஸ்...’ என்று மாறி மாறி சண்டை போடுக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான தினேஷ் - மாயா இருவரும் ‘நீதான் நான்சென்ஸ்...’ என்று மாறி மாறி சண்டை போடுக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Maya and Dinesh

பிக் பாஸ் வீட்டில்  தினேஷ் - மாயா இடையே கடும் மோதல்: வீடியோ

Bigg Boss Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வரவிருக்கும் எபிசோடில் மோதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது. ஏனென்றா, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான தினேஷ் - மாயா இருவரும் ‘நீதான் நான்சென்ஸ்...’ என்று மாறி மாறி சண்டை போடுக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

Advertisment

பிக் பாஸ் வீட்டில், 'பால் ஆன் ராம்ப்' டாஸ்க்கிற்குப் பிறகு போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு நிலவுகிறது. மாயாவும் தினேஷும் வசிக்கும் பகுதியில் தங்கள் பொறுப்புகள் மீது கடுமையான மோதல் நடக்கிறது, ரவீனாவின் கருத்துகளால் ஜோவிகா கண்ணீர் விடுகிறார். இப்படியாக பிக் பாஸ் வீடு ஒரே களேபரமாக உள்ளது. இந்த சூழ்நிலையில்தான்,  இந்த வார எலிமினேஷனுக்கு ஜோவிகா, கூல் சுரேஷ், மணி, விசித்ரா, தினேஷ், சரவணன், அனன்யா மற்றும் பூர்ணிமா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

பிக் பாஸ் வீட்டில், ஒரு வாரத்திற்கு ஜோடியாக கைகளைக் கட்டும் தண்டனை ஏற்கனவே வீட்டிற்குள் சண்டை சச்சரவுகளுக்கு களம் அமைத்துள்ளது. சமீபத்தில் வெளியான பிக் பாஸ் புரோமோவில்  மாயா - தினேஷ் இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்து ‘நீதான் நான்சென்ஸ்’... ‘நீதான் நான்சென்ஸ்’... என்று மாறி மாறி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

இதனால், இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜோவிகா, கூல் சுரேஷ், மணி, விசித்ரா, தினேஷ், சரவணன், அனன்யா மற்றும் பூர்ணிமா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவரகளில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: