தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து நடிகை விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்த நிலையில், நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்தப்போது, அப்போது தலைவராக இருந்த விஜயகாந்த் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி விசித்ராவின் கணவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50 நாட்களை நிறைவு செய்த போட்டியாளர்களுக்கு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் பற்றி பேச ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் பேசிய விசித்ரா, 2001 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகு இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் காவல் நிலையத்திற்கு செல்லாமல் நடிகர் சங்கத்தில் புகார் செய்வது ஏன் என்று கேட்டனர்.
அந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அதனால் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். அந்த ஹோட்டலில் தான் என்னுடைய வருங்கால கணவரை நான் சந்தித்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக அந்த ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த படத்தில் ஹீரோவிடம் நான் இந்த படத்தில் தான் நடிக்கிறேன் என்பதை அறிமுகம் செய்வதற்காக போனேன். ஆனால் அவர் என்னுடைய பெயரைக் கூட கேட்கவில்லை. நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்போ நைட்டு ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் அப்படி சொன்னதுமே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிறகு நான் என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அதனால் ஒரு சிலர் இரவில் என்னுடைய அறையை வந்து தட்டி ரகளை செய்திருந்தனர். இதனால் நான் மிகவும் பயந்தேன்.
எப்படியாவது சூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பிரச்சனையை நான் சகித்து கொண்டிருந்தேன். அந்த நடிகர் சொல்லி சில நபர்கள் தினமும் குடித்துவிட்டு வந்து என்னுடைய அறை கதவை தட்டி பிரச்சனை செய்தனர். இதை கவனித்து என்னுடைய கணவர் என்னிடம் என்ன பிரச்சனை உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.
அப்போது நான் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு அறை வேண்டும், நான் இங்கே தங்கி இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. இது அந்த நடிகருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.. நான் அவர்கள் எண்ணத்திற்கு ஒத்துப் போகவில்லை என்பதால் என்னை எப்படியாவது படத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று மொத்த படக்குழுவே பிளான் செய்தது.
ஒருநாள் படப்பிடிப்பு சண்டை காட்சி நடந்து வந்தது. ஸ்டாண்ட் மாஸ்டர்கள் எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நபர் பின்னாடி இருந்து என்னை தவறான நோக்கத்தில் பின்பக்கத்தில் கை வைத்தார். நான் முதல் முறை தெரியாமல் நடந்தது என்று அமைதியாகிவிட்டேன். ஆனால் அடுத்த டேக்கிலும் இதே மாதிரி நடந்தது. பிறகு நான் அந்த நபரை கையும் களவுமாக பிடித்துக் கொண்டுபோய் ஸ்டாண்ட் மாஸ்டர் இடம் ஒப்படைத்தேன்.
ஆனால் அவர் அந்த நபரை எதுவும் செய்யாமல் என்னை பளார் என்று அறைந்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் யாருமே எனக்கு நடந்த அநீதியை தட்டி கேட்கவில்லை, குரல் கொடுக்கவும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார். நானும் புகார் கொடுத்திருந்தேன். அந்த செய்தி, நியூஸ் சேனல்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் எனக்கு திரைத்துறையில் இருந்து யாருமே உதவி செய்யவில்லை.
நடிகர் சங்கத்திடம் நான் பேசும்போது கூட அவர்கள் இதை தூக்கிப் போட்டுவிட்டு நடிப்பை போய் பாருமா என்று அந்த நேரத்தில் தலைவராக இருந்தவர் கூறினார். இதனால் தான் நான் வெறுத்துப் போய் 20 வருடமாக நடிப்பை விட்டு விலகி இருந்தேன் என்று வேதனையோடு கூறினார்.
இந்த நிலையில் விசித்திரா சொல்வது போல் பார்த்தால் 2001 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் தான் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விஜயகாந்த் இருந்தும் இந்த மாதிரி ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணவில்லையா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜயகாந்த் குறித்து இத்தனை வருடங்களில் முதல் முறையாக இப்படி ஒரு புகார் வந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் விசித்ராவின் கணவர் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஆமாம் அந்த நேரத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்தது விஜயகாந்த் தான். அவரும் இதில் பேசி இருந்தார். ஆனாலும் இதில் சரியான தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தோம். அப்போது நடிகர் சங்கத்தினர் பெரிய இடத்துப் பிரச்சினையாக இருப்பதால் இதில் தீர்வு காணாமல் போய்விட்டார்கள்.
ஆரம்பத்தில் இதுவும் பெரிய பிரச்சனையாக கொண்டு செல்லப்பட்டது தான். ஆனால் அப்போது செயலாளர் ஒருவர் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியதால் தான் இதில் ஆக்ஷன் எடுக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்துகூட தனக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை என விசித்ரா மிகவும் வருத்தப்பட்டார். அவர் சினிமாவை விட்டு விலக அதுவும் ஒரு காரணம் தான் என விசித்ராவின் கணவர் ஷாஜி கூறியுள்ளார். மேலும், விசித்திராவும் நடிகர் சங்கத்தின் செயலாளர் தன்னை இந்தப் பிரச்சினையை தூக்கிப் போட்டு வேலையை பாரு என்று கூறினார் என்று அந்த கதை சொல்லும் டாஸ்க்கில் விசித்ரா கூறியிருந்தார்.
அதனால் அந்த நேரத்தில் செயலாளராக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, நெப்போலியன், எஸ்.எஸ் சந்திரன் என நான்கு பேர் இருந்த நிலையில் யார் இந்த வார்த்தையை சொல்லி இருப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.