நிரூப்-க்கு பாயசத்தில் விஷம் வைக்கணும்… அக்ஷரா பிளான்; அதிர்ந்துபோன பிக்பாஸ்!

அக்ஷரா விஷம் வைக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் நடிகர் விவேக் காமெடி ஸ்டைலில், அப்போ நிரூப்க்கு இந்த வாரம் ஒரு பாயாசம் இருக்கிறது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

bigg boss tamil, bigg boss tamil 5, bigg boss season 5, பிக் பாஸ் , அக்‌ஷரா பாயசத்தில் விஷம் வைக்க திட்டம், நிரூப்க்கு விஷம் வைக்க அக்ஷரா திட்டம், பிக் பாஸ், bigg boss Akshara plans to mix poison to Nirup, akshara, nirup, bigg boss news, bigg boss tamil news

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிலம் காயின் வைத்திருக்கும் நிரூப் ஆளுமை செலுத்துவதால், தன்னை அசிஸ்டண்ட்டாக்கி பழிவாங்குவதை சகித்துக்கொள்ள முடியாத அக்‌ஷரா நிரூப்பிற்கு விஷம் வைக்கணும் என்று கூறியதைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்ல பிக் பாஸும் அதிர்ந்து போயிருக்கிறார்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஏற்கெனவே பிரபலமானவர்களைவிட புதுமுகங்களே அதிகம் உள்ளனர். இதுவரை போட்டியாளர்களில் நாடியா, அபிஷேக், சின்னபொண்ணு உள்ளிட்டோர் எளிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருப்பவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு காயின் வைத்திருக்கும் நபர் தன்னுடைய ஆளுமையை செலுத்துவார். கடந்த வாரம் முழுவதும் நெருப்பின் ஆற்றல் வாரமாக இருந்ததால், நெருப்பு காயினை வைத்திருந்த இசைவாணி பிக்பாஸ் வீட்டில் ஆளுமையை செலுத்தினார். இதற்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் இசைவாணி சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்கிறார் என்று புகார் கூறினார்கள். அதோடு, இசைவாணிக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவிட்டனர். சக போட்டியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்காததால், இசைவாணி வருத்தப்பட்டார்.

இந்த சூழ்நிலையில்தான், இந்த வாரம் திங்கள்கிழமை (நவம்பர் 1) முதல் நிரூப்பிடம் உள்ள நிலம் காயின் ஆளுமை செலுத்தப் போகிறது என்று பிக் பாஸ் கூறியதை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் நிரூப் தன்னுடைய ஆளுமையை காட்டத் தொடங்கிவிட்டார்.

நிலம் காயின் ஆற்றல் செயல்படுவதால், நிரூப்க்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் நிரூப் தனக்கு ஒரு அஸிஸ்டண்ட் வைத்துக்கொள்ள அதிலும் பெண் அசிஸ்டன்ட் நியமித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வாரம் முழுவதும், பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் யாராவது நிரூப்பிடம் பேச வேண்டும் என்றால்கூட அவர்கள் அந்த அசிஸ்டன்ட் இடம் அனுமதி பெற்று தான் பேசவேண்டும். இப்படி நிரூப்பிற்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

நிரூப் தனக்கு கிடைத்த இந்த சலுகையை பயன்படுத்தி தனக்கு அசிஸ்டெண்ட் ஆக அக்ஷராவை நியமித்து பழிவாங்கத் தொடங்கிவிட்டார். இதனால், கோபடமைந்த அக்ஷரா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வேண்டுமானால் போய்விடுகிறேன். ஆனால், நிரூப்பிற்கு அஸிஸ்டண்ட்டாக இருக்க சம்மதிக்க மாட்டேன் என்று அதிரடியாக கூறினார். ஆனால், வருண் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்ட அக்ஷரா மனம் மாறி நிரூப்புக்கு அஸிஸ்டண்ட்டா இருக்க ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அக்ஷராவும், நிரூப்பும் சமாதானமாக பேசி முடிவெடுத்தாலும், அக்ஷரா மனதிற்குள் நிரூப்பின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்.

நிரூப்பிடம் இருந்து தப்பிக்க விஷம் வைத்து விட வேண்டும் என்று அக்ஷரா பேசியிருப்பது பிக் பாஸ் பார்வையாளர்கள், ரசிகர்களை மட்டுமல்ல, பிக் பாஸையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் சிரிக்கவும் வைத்துள்ளது.

ஏனென்றால், அக்ஷரா, தன்னை பழிவாங்கும் நிரூப்புக்கு விஷம் வைத்துவிட வேண்டியதுதான். அதுவும் ஒரு பெரிய அண்டா நிறைய வைக்க வேண்டும் என்று கூறியது சிரிக்க வைத்திருக்கிறது. நிரூப் சைஸ்க்கு விஷம் வைக்க வேண்டும் என்றால் அதை பெரிய அண்டாவில் கலந்து வைத்தால் தான் வேலை செய்யும் என்று கோபத்தில் கூறியிருப்பது ரசிகர்களையும் பிக்பாஸையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தாலும் அதே நேரத்தில் சிரிப்பையும் வர வைத்துள்ளது.

அக்ஷரா விஷம் வைக்க வேண்டும் என்று கூறியது அவர் நிரூப் மீது இவ்வளவு கோபமாக இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், அக்ஷரா விஷம் வைக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் நடிகர் விவேக் காமெடி ஸ்டைலில், அப்போ நிரூப்க்கு இந்த வாரம் ஒரு பாயாசம் இருக்கிறது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil akshara plans to mix poison at food of nirup fans shocks

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com