/tamil-ie/media/media_files/uploads/2019/05/bigg-boss-3-date-is-confirmed.jpg)
Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் ஒளிபரப்பு வரும் 23-ம் தேதி துவங்கவிருக்கிறது.
தொடர்ந்து மூன்றாம் முறையாக இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இதில் யார் யாரெல்லாம் பங்கேற்பாளராக கலந்துக் கொள்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியுள்ளது.
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நகைச்சுவை நடிகை ஜாங்கிரி மதுமிதா இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்கிறாராம். இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிப்பில் வெளியான ‘ஓகே ஓகே’ படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் மதுமிதா. விஜய், அஜித், விக்ரம், கார்த்தி, லாரன்ஸ் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்த இவர், சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.
இவரைத் தொடர்ந்து கர்நாகட இசை பாடகம் மோகன் வைத்யாவும் போட்டியாளராக பிக்பாஸில் கலந்துக் கொள்கிறாராம்.
இவர்களுடன், ஆல்யா மானசா, கஸ்தூரி, ராதாரவி, பிரேம்ஜி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களம் இறங்கியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் 3-யின் போட்டியாளர்களை 23-ம் தேதி தெரிந்துக் கொள்ள ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.