பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய முதல் வார எலிமினேஷனில் எதிர்பாரா திருப்பமாக தீயா வேலை செய்த இளம் பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாயகன் வழங்கும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 2-ம் தேதி தொடங்கியது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் வீடு பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டு வீடாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனிலும் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், பார்வையாளர்களின் ஓட்டு அடிப்படையில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு பிக் பாஸ்
வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
/indian-express-tamil/media/media_files/pgKtW46fGd0dbvJk8CBI.jpg)
ஆனால், இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், பிக் பாஸ் யாரும் எதிர்பாரத விதமாக முதல் வாரமே எலிமினேஷன் செய்து ஒரு போட்டியாளரை வெளியேற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிக் பாஸ் சீசனில் சீனியர் போட்டியாளர்களான பவா செல்லதுரை, யுகேந்திரன், விசித்ரா இவர்களில் யாராவது வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் தீயாக வேலை செய்த இளம் பெண் போட்டியாளரான அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அனன்யா ராவ் ஒரு பரத நாட்டியக் கலைஞர், அவர் பிக் பாஸ் வீட்டில் தீயாக வேலை செய்து கொண்டிருந்தார். உடலில் பச்சைக் குத்திக் கொள்வதில் (டாட்டூ) ஆர்வமுடையவர் அனன்யா. இவருடைய சக போட்டியாளரான விசித்ரா, அனன்யா உடலில் ஆங்காங்கே டாட்டூ வரைந்திருந்ததைப் பார்த்து கேட்டார். இதற்கு அனன்யா, தான் எங்கெல்லாம் டாட்டூ போட்டிருக்கிறேன் என்பதைக் கூறி, இடுப்பில் டாட்டூ போட்டிருந்ததைக் காட்டினார். அப்போழுதில் இருந்து பிக் பாஸ் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் அனன்யாவை டாட்டூ பாப்பா என்று செல்லமாக அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
/indian-express-tamil/media/media_files/pK5khsp6MQ8OlbrG7sNn.jpg)
பிக் பாஸ் வீட்டில், அனன்யா ராவ் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில், டாஸ்க்கில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய் துவந்தார். அவர் எலிமினேஷனுக்கு வரமாட்டார் என்று ரசிகர்கள் பலரும் எண்ணியிருந்த நிலையில், இளம் பெண் அனன்யாவை முதல் வாரத்திலேயே எலிமினேஷன் செய்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளார். அனன்யா ராவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“