Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இன்றோடு ஒரு மாதம் ஆகியிருக்கிறது. நான்கு வாரம் கடந்து விட்ட இந்நிகழ்ச்சியில் முதல் வாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை. பின்னர் ஃபாத்திமா பாபு, வனிதா விஜயக்குமார், மோகன் வைத்யா என தொடர்ந்து மூவர் வெளியேறினர்.
இந்நிலையில் வரும் வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நேற்று நடந்தது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு பேரை நாமினேட் செய்யும்படி பிக்பாஸ் கேட்டுக் கொண்டார். அதில் அபிராமியையும், மீராவையும் சாக்ஷி நாமினேட் செய்தார்.
பிக்பாஸ் சாக்ஷி
இயக்குநர் சேரன், சாக்ஷி மற்றும் கவினை நாமினேட் செய்தார். அதையே மதுவிதாவும் பின்பற்றினார். பின்னர் சேரனுடன் இணக்கமாக இருக்கும் ரேஷ்மா, அவரது பெயரை நாமினேட் செய்தது பலருக்கு அதிர்ச்சியளித்தது. சேரனுக்கும் சரவணனுக்கும் ஒரு கோல்ட் வார் இருந்துக் கொண்டே வருகிறது. வழக்கம் போல சேரனையே நாமினேட் செய்தார் சரவணன். ஆனால் இதுவரை ஒருமுறை கூட சரவணனின் பெயரை சேரன் நாமினேட் செய்ததே இல்லை.
இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், கவின் செய்த நாமினேஷன் தான் பலருக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியது. ஆம்! தன்னுடன் நட்பு பாராட்டும் சாக்ஷியை தான் வீட்டை விட்டு வெளியேற்ற கவின் நாமினேட் செய்திருந்தார். கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல் போட்ட குறும்படத்திற்குப் பிறகு தான் கவினிடம் இந்த மாற்றம் வந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.