பதறாதீங்க ரசிகர்களே… லாஸ்லியாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம்!

லேட்டஸ்ட் தகவல், லோஸ்லியாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றே வருகிறது. எனவே ரசிகர்கள் பதறாமல் பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியையும், லாஸ்லியாவின் மேனரிஸத்தையும் ரசிக்கலாம்.

Losliya Mariyanesan
Losliya Mariyanesan

லாஸ்லியா ரசிகர்களுக்கு உற்சாக செய்தி இது. ஆமாம், பிக் பாஸ் தமிழ் 3 அழகிக்கு திருமணம் ஆனதாக வந்த செய்தி வதந்திதானாம். எனவே அவரது ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

நடிகர் – நடிகைகள், இயக்குநர், பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நடன இயக்குநர், மாடல்கள் என வெவ்வேறு விதமான துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்களின் மனம் கவர்ந்தவராக வலம் வருகிறார், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

வனிதா, சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் டீமுக்கும், மதுமிதா, மீரா டீமுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் வேளையில், அமைதியை மட்டும் கடைபிடித்து வருகிறார் லாஸ்லியா. நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு, ஆர்மி கூட ஆரம்பிக்கப்படுள்ளது.

இந்நிலையில் லாஸ்லியா ஏற்கனவே திருமணமானவர் என்ற செய்தியை, அவருடன் பள்ளியில் பயின்ற ஒருவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் லாஸ்லியாவின் சுயரூபம் எப்போது வெளிப்படும் என ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாகவும், பள்ளியில் மிக டேஞ்சரான நபர் லாஸ்லியா தான் எனவும் அந்த நபர் குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் வந்தன.

அதோடு, இவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது எனவும் அந்த நபர் கொளுத்திப் போட்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த லாஸ்லியா ரசிகர்கள், அப்படி என்றால் எதற்காக தன்னைப் பற்றிய விஷயங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார் லாஸ்லியா என சோகமானார்கள்.

ஆனால் லேட்டஸ்ட் தகவல், லோஸ்லியாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றே வருகிறது. எனவே ரசிகர்கள் பதறாமல் பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியையும், லாஸ்லியாவின் மேனரிஸத்தையும் ரசிக்கலாம்.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil losliya married fans shocked

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com