BIGG BOSS Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றவர் சோம் சேகர். இவர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் குத்துச் சண்டை வீரரும் ஆவார். தவிர ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார். மேலும், தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், ஆனால் தனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றும் முன்பு குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது விளம்பர படங்கள் மற்றும் சில படங்களில் நடித்து வரும் சோம், அவ்வப்போது பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார். மேலும் அப்போது எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டும் வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் சோம் அவரது பிக்பாஸ் வீட்டு நண்பர் ரியோவுடன் நேரத்தை கழித்துள்ளார். இந்த இரு நண்பர்களும் வீடியோ கேம் விளையாடியுள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரியோவின் மனைவி ஸ்ருதி கேப்ஷனில், ‘எனது தொலைக்காட்சி நேரத்தை கடத்தி விட்டார் சோம்’ (Hijacking my TV time) என்று குறிப்பிட்டுள்ளார் சோம். இதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக பதிவிட்டுள்ள சோம் “ஹாஹா மன்னிக்கவும்” என்றுள்ளார். இணைய பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ கமெண்ட் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“