ஷாலு ஷம்மு முதல் கிரண் வரை… பிக் பாஸ் 4, செம்ம ரகளையாக ரெடியாகும் லிஸ்ட்!

Bigg Boss Tamil 4 contestants: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்களின் உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியல் என்று ஒரு பட்டியல் தீயாய் பரவி வருகிறது.

Bigg Boss Tamil news: கொரோனா ஊரடங்கால் முடங்கியிருந்த டெலிவிசன்கள் அதிலிருந்து மீண்டு தற்போது ரசிகர்களை மகிழ்விக்க தொடங்கிவிட்டன. அதிலும் பிக் பாஸ் நான்காவது சீசன் தொடங்கவுள்ளதாக கூறப்பட, சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் அதே பேச்சாகத் தான் உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் 4வது சீஸன் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், போட்டியாளர்கள் யார் என்பது குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது.

இதற்கிடையே, பிக்பாஸ்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் இன்னும் சில தினங்களில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் பரவ, சிலர் தங்கள் பெயர் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் இருப்பதை கண்டு ஷாக் ஆகி வருகின்றனர். ஒரு சிலர் நாங்கள் பங்கேற்கவில்லை என்று விளக்கம் கொடுத்தாலும், இன்னும் சிலரோ இதை பற்றி வாய்திறக்கவில்லை.

Bigg Boss Tamil 4 contestants: பிக் பாஸ் தமிழ் 4

எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்களின் உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியல் என்று ஒரு பட்டியல் நெட்டிசன்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

சனம் ஷெட்டி: இந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் சனம் ஷெட்டி. பிரபல மாடல் மட்டுமல்லாமல், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இந்த சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்ற தர்ஷனின் முன்னாள் காதலியும்கூட. இருவருக்கும் இடையே சமீபத்தில் பெரிய (அக்கப்)போரே வெடித்தது குறிப்பிடத்தக்கது.

கிரண்: இவருக்கு அறிமுகம் தேவையில்லை. நீண்ட வருடங்களுக்கு முன்பு, விக்ரமின் ஜெமினி படத்தில் அறிமுகமாகி அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து அதே வேகத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகினார். அவ்வப்போது சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஷாலு ஷம்மு: நடிகை ஷாலு ஷம்மு, பிரபல மாடலாக இருந்து வரும் அதே வேளையில் சில படங்களில் சின்ன சின்ன படங்களில் நடித்திருக்கவும் செய்திருக்கிறார். ஆனால் சோஷியல் மீடியாவில் ஷம்மு ஏக பிரபலம். வலைத்தளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதி என்று கூறப்படுகிறது.

ரியோ ராஜ்: பிரபல விஜேவாக இருந்து சின்னத்திரையில் நடித்து தற்போது வெள்ளித்திரை வரை எத்தியிருக்கும் ரியோ ராஜ் பிக் பாஸில் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதி எனக் கூறப்படுகிறது. கடந்த சீசனில் கவின் கலகலப்பாக பிக் பாஸ் ஷோவை கொண்டு சென்றது போல் இந்த முறை ரியோ கொண்டு செல்வார் என இப்போதே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அமுதவாணன்: விஜய் டிவியின் தத்து பிள்ளை ரேஞ்சில் இருக்கும் அமுதவாணன், மிமிக்ரி ஷோ, ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளை அடுத்து இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ளும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் என்பதால் இவர் பங்கேற்பதும் உறுதி என்கிறார்கள்.

அம்ரிதா அய்யர்: பிகில் என்ற ஒற்றை படத்தின் மூலம் பிரபலமான அம்ரிதாவின் பெயர் முதலில் இருந்தே பிக் பாஸ் லிஸ்ட்டில் அடிபட்டு வருகிறது. முதலில் அதை மறுத்த அவர், தற்போது அது சஸ்பென்ஸ் என்று கூறி ரசிகர்களை எகிற வைக்கிறார். இதனால் இவர் பங்கேற்பது கன்பார்ம் என்கிறார்கள்.

ஷிவானி நாராயணன்: இவர் சீரியல் நடிகை என்றாலும், இன்ஸ்டாகிராமில் தான் இவர் செம ரீச். இன்ஸ்டா உள்ளிட்ட வலைதளங்களில் ஷிவானிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கின்றனர். தினமும் வலைதளங்களில் கலர் கலர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்த அம்மணி, பிக் பாஸில் பங்கேற்பதன் மூலம் இனி தினமும் டிவி மூலம் கிறங்கடிக்க இருக்கிறார்.

புகழ்: குக் வித் கோமாளி ஷோவை பார்த்த அனைவருக்கும் புகழ் நல்ல பரிட்சயம். அதில் அவர் அடித்த லூட்டி தற்போது பிக்பாஸ் வரை கொண்டு வந்திருக்கிறது. இவரும் பங்கேற்பது உறுதி எனக் கூறப்படுகிறது. அப்படி புகழ் பங்கேற்றால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சிரிப்பு கேரண்டி.

ஆர்ஜே வினோத்: யூடியூப்பராக இருந்து சினிமா நட்சத்திரம் ஆக மாறியிருக்கும் வினோத் இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயரை கொண்டுள்ளார். இதனால் பிக் பாஸ் அவருக்கு அடுத்த திருப்பத்தை கொடுக்கும் என்பதால் இவர் பங்கேற்க ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

பாலாஜி முருகதாஸ்: மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா என்ற பட்டங்களை பிரபல மாடல் இந்த பாலாஜி முருகதாஸ். இவர் பெயரும் பிக் பாஸ் லிஸ்ட்டில் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமல்ல, நடிகை லக்ஷ்மி மேனன், விஜேவும் நடிகருமான ரக்ஷன், சூர்யா தேவி என பலரின் பெயர்கள் பிக் பாஸ் லிஸ்ட்டில் அடிபடுகிறது. ஆனால் எதையும் இன்னும் டிவி தரப்பு கன்பார்ம் செய்யவில்லை.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil news bigg boss tamil 4 contestants shalu shammu rj vinoth

Next Story
தன்னுடைய சமூக, தொழில் ரீதியான நிர்வாகி இவர்தான்… அஜித் வெளியிட்ட அறிக்கை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com