பிக்பாஸ் நிகழ்ச்சியின் 37 ஆவது நாளான நேற்று பார்வையாளர்களுக்கு ஏற்றபடி செம ஜாலியாக இருந்தது என்று சொல்லலாம். வழக்கம்போல் பிக்பாஸ் வீட்டில் நேற்று காலை ’துள்ளுவதோ இளமை’ என்ற பாடல் ஒலித்து அனைவரையும் எழுப்பி விட்டது.
அப்போது சாண்டி அனைவருக்கும் எம்ஜிஆர் போல் நடனம் ஆட கற்றுக் கொடுத்தார். பின்னர் முகென் அனைவருக்கும் ரேப் சாங் பாட கற்றுக் கொடுத்தார். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை தொகுத்து ரேப் சாங் பாடினார் அபிராமி. அவருக்குப் போட்டியாக ரேஷ்மாவும் ரேப் சாங் பாடி அசத்தினார். பின்னர் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் பெயர் ”போடு ஆட்டம் போடு”. அதாவது, பிக் பாஸ் கொடுக்கும் உடைகளைப் போட்டுக்கொண்டு போட்டியாளர்கள் அந்தந்த பிரபலங்களின் பாடல்களுக்கு நடனம் ஆட வேண்டும். அவ்வப்போது ஒலிபரப்பப்படும் பாடலுக்கு யாரும் நடனமாட வரவில்லை என்றால், மதிப்பெண் குறைக்கப்படும் என்பது விதி.
இந்த டாஸ்க்கில் சரவணன் விஜயகாந்த்தின் கெட்டப்பில் கடைவீதி கலகலக்கும் பாடலுக்கும், சேரன் – ரஜினிகாந்தின் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலுக்கும், சாண்டி – சிம்புவின் மன்மதன் பாடலுக்கும், கவின் – அஜித்தின் வேதாளம் பட பாடலுக்கும், முகென் விஜய்யின் போக்கிரி பொங்கல், தர்ஷன் சகலகலா வல்லவன், லாஸ்லியா கட்டு கட்டு கீரை கட்டு, அபிராமி மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன, ரேஷ்மா ரம்யா கிருஷ்ணனின் வை ராஜா வை, மதுமிதா - சரோஜா தேவியின் ஒரு பெண்ணை பார்த்து நிலவை, ஷெரின் போட்டு வைத்த காதல் ஒன்னு ஓகே கண்மணி, சாக்ஷி தஞ்சாவூர் ஜில்லாக்காரி என்ற பாடலுக்கும் நடனமாடினார்கள். பின்னர் குரூப் டான்ஸாக ”ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா” என்ற பாடலுக்கு அனைவரும் நடனம் ஆடினார்கள்.
இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுடன் சேர்ந்து பார்வையாளர்களும் வெகுவாக என்ஜாய் செய்தனர். இதன் பிறகு, இலங்கை மற்றும் மலேசியாவின் கலாச்சாரம் பற்றி லாஸ்லியாவும் மற்றும் முகெனும் பகிர்ந்துகொண்டனர்.