‘பிரியங்காவை எதிர்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை’ – வலுக்கும் பிரியங்கா – தாமரை பனிப்போர்!

Bigg Boss Tamil Priyanka Thamarai rude fight goes viral Tamil News அது ஏன் ஆண்கள் அனைவரும் சேர்ந்து பிரியங்காவிற்கு மட்டும் அவ்வளவு ஆதரவு தருகின்றனர்?

Bigg Boss Tamil Priyanka Thamarai rude fight goes viral Tamil News
Bigg Boss Tamil Priyanka Thamarai rude fight goes viral Tamil News

Bigg Boss Tamil Priyanka Thamarai rude fight goes viral Tamil News : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 அதன் இறுதிக் கட்டத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில், போட்டியின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளார் பிக் பாஸ். அந்த வரிசையில் இந்த வாரம் ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்குகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதன்படி நேற்று முட்டை பாதுகாக்கும் டாஸ்க்கில் தாமரையும் பிரியங்காவும் ஆவேசமாக சண்டை போடும் காட்சிகளை ப்ரோமோவிலேயே பார்த்தோம். நிகழ்ச்சி முடியும் வரை தாமரையிடம் பேச மாட்டேன் என்று பிரியங்கா கூறுவதையும் பார்த்தோம். அந்த அளவிற்குப் பிரச்சனை என்பதை நேற்றைய எபிசோட் விளக்கியது.

வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அனைவரும் நேற்று டார்கெட் செய்தது பாவனி மற்றும் தாமரையைத்தான். முதல் நாளில் வலுவான போட்டியாளரான நிரூப்பை அனைவரும் ஒன்றுகூடி, ஃபினாலே டிக்கெட் வாங்குவதிலிருந்து வெளியேற்றினர். அதன் தொடர்ச்சியாக, நேற்று அந்த அளவிற்கு வலுவில்லாத பாவனியையும், மக்கள் ஆதரவு அதிகம் பெற்றிருக்கும் தாமரையையும் டார்கெட் செய்தனர்.

அவ்வளவுதான்… அது ஏன் ஆண்கள் அனைவரும் சேர்ந்து பிரியங்காவிற்கு மட்டும் அவ்வளவு ஆதரவு தருகின்றனர் என்கிற கோபத்தில் கொதித்தார் தாமரை. வாய் பேச்சு, கை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு சண்டை நீண்டது. இதில், மனதளவில் மிகவும் காயப்பட்ட பிரியங்கா உணர்ச்சிவசப்பட்டு சில கடுமையான வார்த்தைகளையும் உபயோகித்தார்.

இறுதியாகத் தாமரை மற்றும் பாவனி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட, பிரியங்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். எவ்வளவு முயற்சி செய்தாலும், இறுதியில் அங்கிருந்த சக போட்டியாளர்கள் தாமரைக்கு ஆதரவளிக்கவில்லை என்கிற கோவம் தாமரையிடம் அதிகமாக இருந்தது. பிரியங்காவை ராஜு சமாதானம் செய்ய, நிரூப் தாமரையிடம், “வீட்டில் யாரும் பிரியங்காவை எதிர்த்து நிற்க மாட்டார்கள்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதற்கு, ‘ஆம்’ என்று தாமரையும் ஒப்புக்கொண்டார்.

மேலும், “என் கருத்துப்படி, பிரியங்காவிற்கு வெளியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவர் என்ன சொன்னாலும் சரி என்று எல்லோரும் நினைக்கிறார்கள். வீட்டிற்குள் எந்த போட்டியாளரும் அவருக்கு எதிராகப் பேசினால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்று நிரூப் மேலும் கூறினார். இது ஒரு வகையில் உண்மையும்கூட.

மேலும், அதற்கு பதில் அளிக்கும் விதமாகத் தாமரை, “நான் ஏன் பிரியங்காவிடம் சென்றேன் என்று அவர் தொடர்ந்து கேட்கிறார். அவர் போட்டியிடத் தயாராக இல்லை என்றால், ஏன் கேம் ஷோவுக்கு வருகிறார்?” என்று தன் நியாயமான கேள்வியையே முன்வைத்தார். இவர்கள் இருவரின் ஆதங்கமும் 100 சதவிகிதம் உண்மைதான். ஏற்கெனவே நற்பெயரும், மக்கள் ஆதரவும் பெற்றிருக்கும் பிரியங்கா வளர்ந்து வருபவர்களுக்குக் கொஞ்சம் வழி விட்டிருக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil priyanka thamarai rude fight goes viral tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com