/tamil-ie/media/media_files/uploads/2019/07/Bigg-Boss-Promo.jpg)
Losliya Dance
Today's Bigg Boss Promo: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன. முதல் ப்ரோமோவில் முகெனை பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டு, “இதுல நான் யாருக்கும் விளக்கம் கொடுக்கனும்ன்னு அவசியம் இல்ல. ஹி இஸ் மை பட்டி, ஹி இஸ் மை ஃபிரெண்ட், எவளுக்காவது பிராப்ளம் இருந்தா உங்களோட வச்சிக்கோங்க. ஓகே வா? நான் லவ் பண்ணுனா, நான் லவ் பண்றேன்னு அவன் மூஞ்சிய பாத்து சொல்லுவேன் நான். எங்களுக்குள்ள பிரச்னை வந்தா, அத நாங்க பாத்துக்குறோம். அத சால்வ் பண்ண யாரும் வர வேண்டாம். அதுல உங்களுக்கு எதாச்சும் பிராப்ளம்ன்னா குளோஸ் யுவர் ஐஸ் அண்ட் வாக்” என்கிறார் அபிராமி. இடையிடையே மதுமிதா காட்டப்படுகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo1#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3#VijayTelevisionpic.twitter.com/eJpqPlOE01
— Vijay Television (@vijaytelevision) 3 July 2019
அடுத்ததாக வந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், காதலில் சொதப்புவது எப்படி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அதற்கு கவின், “இப்போ நீங்க லவ்வெல்லாம் பண்ணிட்டீங்க. ஆனா இப்போ நீங்க எஸ்கேப் ஆகனும்ன்னு ட்ரை பண்றீங்கன்னா, அவங்க உங்க மேல பழி போடுறதுக்கு முன்னாடி, நீங்க அவங்க மேல பழி போட்டுடனும்” என்கிறார். அதற்கு “ரெண்டு மூணு பேர லவ் பண்ணும்போது என்ன பண்றது?” என்கிறார் சேரன். ”மூணு பேரையும் ஒரே இடத்துல வச்சி லவ் பண்ணக் கூடாது” எனும் கவினிடம், “மாட்டிக்கிட்டியா எங்கயாவது?” என்கிறார் சேரன். ”அநேகமா இந்த வீட்ல எதாச்சும் மாட்டும்ன்னு நினைக்கிறேன்” என்று சிரிக்கிறார் கவின்.
சிங்கிள்ஸ் சாபம் உன்ன சும்மா விடாதுடா..! ???????? #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil#BiggBossTamil3#VijayTelevision#Day10#Promo2pic.twitter.com/JIj2flHHaw
— Vijay Television (@vijaytelevision) 3 July 2019
ஆக, முதல் ப்ரோமோ அதகளமாகவும், இரண்டாவது ப்ரோமோ ஜாலி கேலியாகவும் வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.