Today's Bigg Boss Promo: கடந்த 23-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 2 வாரங்களைக் கடந்திருக்கிறது. 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இப்போட்டியிலிருந்து முதல் ஆளாக செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு முதல் ஆளாக வெளியேறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் இதன் ப்ரோமோக்கள் அதிக கவனம் பெறும். ஒரு மணி நேர நிகழ்ச்சியைப் பார்க்க நேரமில்லாதவர்கள், 30 நொடி ப்ரோமோவின் மூலம் முக்கிய விஷயங்களைத் தெரிந்துக் கொள்வார்கள்.
இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ”இன்னைக்கு முழுக்க நீ என்ன பாக்கவே கூடாது. நானா உன்ன பாத்தா கூட, நீ அந்தப் பக்கம் திரும்பிக்கனும்” என கவினிடம் கூறுகிறார் லாஸ்லியா.
"நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கனும்ன்னு சொல்லு, வச்ச கண்ண எடுக்காம பாக்க சொல்லு, இதான் டாஸ்க்” என்கிறார் கவின். ஏற்கனவே கவினுக்கு லாஸ்லியா மீது கிரஷ் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இந்த ப்ரோமோ இன்றைய நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்னின் இன்றைய நிகழ்ச்சியின் அடுத்த 2 ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் இன்று வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் விளையாடும் முனைப்புடன் இறங்கி விட்டார்.கொலைக்காரர்களாக வினிதா மற்றும் ராவோ ஸ்கீரெட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பிக் பாஸ் தரும் டாஸ்க் தான் இன்று ஹைலைட்டாக இருக்க போகிறது.
அதே போல் இதுவரை சோ ஸ்வீட்,ஏஞ்சல், அழகிய ராட்சசி என பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கவினால் கொஞ்சப்பட்ட லாசியாவுக்கு ஏதோ பிரச்சனை போல். வீட்டில் அவரும் மிகவும் சோகமாக முகத்தில் வெறுப்புடன் சுற்றித் திரியும் ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த 3 ப்ரோமோக்களை வைத்து பார்க்கையில் பிக் பாஸ் வீட்டில் இன்று கண்டிப்பாக ஏதோ சம்பவம் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது.