Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என ‘வானத்தைப் போல’ படத்தை பிரதிபலித்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ், போக போக தங்களது சுயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த இடத்தில் நமக்கு ஒரு மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. இவர்களின் குணமே இது தானா அல்லது சண்டையில் சட்டை கிழிந்தாலும் பரவாயில்லை, ’நம்மை நாலு பேர் கவனிக்கனும்’ என்ற ’அட்டென்ஷன் சீக்கிங்கா’? எனத் தெரியவில்லை. தினமும் யாராவது 2 பேர் பிக்பாஸ் வீட்டில் அடித்துக் கொள்கிறார்கள். (ஒரு வேளை தினமும் யார் யார் அடிச்சுக்கனும்ன்னு ஷெட்யூல் போட்டு வச்சிருப்பாங்களோ?)
இன்று வந்துள்ள ப்ரோமோவில் வனிதாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை நடக்கிறது. ”ஒண்ணுமே தெரியாத மாதிரி ஊமை குசும்பியா இருப்பாங்க, ஆனா அவங்க செய்யுற காரியம் எல்லாம் நம்பவே முடியாது. கட்டின தாலிய வந்து கழட்டி வச்சிட்டு வருவாங்களாம். அவ சும்மா ஒரு பாட்டிலை வச்சிட்டு குழந்தைன்னு சொன்னா, அத நீ தப்பா புரொஜெக்ட் பண்ற?” என கோபமாகிறார் வனிதா.
நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Y4IuNze9d
— Vijay Television (@vijaytelevision) 2 July 2019
”ஆமா அவ பண்றது தப்பு தான், அவ ஓவரா தான் பண்றான்னு சொன்னுச்சுல்ல இந்த வாய்?” என்கிறார் மதுமிதா. ”உன்னோட ஒப்பினியன்ஸ உன்னோட வச்சுக்கோ” என வனிதா சொல்ல, ஏதோ முணுமுணுக்கிறார் மதுமிதா. உச்சக்கட்ட கோபமான வனிதா, “யூ ஷட் அப் மேன்” எனக் கூற, “நீங்க ஷட் அப் பண்ணுங்க” என்கிறார் மதுமிதா. ஆக, இன்றைய எபிசோடில் வனிதாவுக்கும், மதுமிதாவுக்கு சண்டை நடப்பது உறுதி.
இதற்கடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. அதில் பிக்பாஸ் ஏதோ டாஸ்க் கொடுக்கிறார். இதற்கு யாரும் உதவி செய்யக் கூடாது என்ற உத்தரவையும் பிறப்பிக்கிறார். அதை மீறி மீரா யாருக்கோ உதவுவது தெரிகிறது.
பிக்பாஸின் டாஸ்க் லெட்டரைப் படித்த கவின், இது குறித்து மீராவிடம் கேட்கிறார். “ஹெல்ப் பண்ணக் கூடாதுன்னு ஒரு ரூல் இருக்குல்ல என்ற கவினிடம், நான் இண்டைரக்ட்டா தான் ஹெல்ப் பண்றேன்” என தான் செய்ததை நியாயப்படுத்துகிறார் மீரா. “ரூல்ஸ் படிச்சது நான், எனக்குத் தெரியாதா?” என கவின் கேட்க, “கவின் நீ பேசாத ஓகே-வா?” என்கிறார் மீரா. ”உனக்கு தெரிலன்னா இன்னொரு டைம் ரூல்ஸ படிச்சிட்டு போ, உன் கிட்ட யாரும் சும்மா சண்டைக்கு வரல, அதுக்கு ஆசையும் கிடையாது” என கவின் கூற அதற்கு மீரா ஏதோ கூறுகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo2 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/I4z2Jnh9Qk
— Vijay Television (@vijaytelevision) 2 July 2019
“வயசு வித்தியாசம் பாத்து பேசு மீரா” என மோகன் வைத்யா கூற, அதை காதில் வாங்காமல் மீண்டும் தன்னை நியாயப்படுத்துகிறார் மீரா.
“வயசு வித்தியாசம் பாத்து பேசு மீரா. சும்மா எல்லார் கிட்டயும் கத்துற மாதிரி கத்துற? நான் சொல்றேன்ல, முதல்ல வயசுக்கு மரியாதை குடு” என அதட்டுகிறார் மோகன் வைத்யா.
ஆக, மீராவுக்கும் கவினுக்கும் கூட இன்றைய எபிசோடில் சண்டை இருப்பது தெளிவாகிறது.
இதற்கிடையே வெளியில் மீரா மிதுன் மீது நிறைய மோசடி புகார்கள் இருப்பதாலேயே அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பதாக, அவர் மீது முதல் புகாரைக் கிளப்பிய ஈவெண்ட் மேனேஜர் ஜோய் மைக்கேல் தெரிவித்தார். சில தினங்களுக்கு முன் ஒரு நேர்க்காணலில் பேசிய ஜோய், “மீரா மிதுனால் அபிராமி, சாக்ஷி, தர்ஷனின் கேர்ள் ஃபிரெண்ட் (மீராவிடம் பறிக்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா அழகிப்பட்டத்தை தற்போது வைத்திருக்கும் சனம் ஷெட்டி), மற்றும் கவினின் ஃபிரெண்ட்” ஆகியோர் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். வெளியில் இருக்கும் போதே மீராவைப் பற்றி அவர்கள் தெரிந்தவர்கள் அதனால் தான் அவர்களால் சகஜமாக பழக முடியவில்லை, என்பதையும் ஜோய் குறிப்பிட்டிருந்தார்.