Bigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கத்திலேயே தன்னுடைய வேலையை காட்டிய கமல்

Bigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட வீடியோவில்,...

Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி, அனைவரின் எதிபார்ப்புகளையும் இன்று இரவு 7 மணிக்கு பூர்த்தி செய்கிறது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 க்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நேற்று இரவே முடிவடைந்துவிட்டது. போட்டியில் கலந்துக்கொள்ளும் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் 16 பேரும் நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

பிக் பாஸ் 2 தமிழ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் இன்று காலை காது கிழியும் அளவிற்கு பாட்டும் போட்டு எழுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் இது எதையும் நீங்கள் பார்க்க முடியாது. ஏனென்றால், இன்று தான் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி உங்கள் வீட்டில் ஒளிபரப்பாகும். அதாவது அதிகாரப்பூவமாக இன்று முதல் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதற்கான இரண்டாவது பிரமோ இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் மறைமுகமாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறார் கமல் ஹாசன். என்ன அது?

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மட்டும் நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. புதிதாக தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும், அரசியல் பிரமுகராகவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இன்று காலை வெளியாகியுள்ள 2வது பிக் பாஸ் 2 தமிழ் பிரமோவில், “என்னுடைய பலமெல்லாம் இங்கிருந்து தான் வருகிறது! எனக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது நீங்கள் தான்!” என கமல் ஹாசன் கூறுகிறார். அதாவது, பிக் பாஸ் மட்டுமல்ல இவரின் அரசியல் வாழ்க்கையிலும், மக்கள் தான் இவருடைய பலம் என்று மறைமுகமாக கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் குறித்த செய்திக்கு : (Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2 : ஆண்டவர் ஆட்டம் இன்று ஆரம்பம்! போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!!)

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி பிரமோவிலேயே இப்படி என்றால்… நிகழ்ச்சி முழுவதும் தெரிக்கவிட இருக்கிறார் கமல் ஹாசன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close