Advertisment

Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2 : ஆண்டவர் ஆட்டம் இன்று ஆரம்பம்! போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!!

Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ள, பிக் பாஸ் தமிழ் 2 போட்டியாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளது.

author-image
Vaishnavi Balakumar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Big boss 3 tamil பிக் பாஸ் போட்டியாளர்கள்

Big boss 3 tamil : பிக் பாஸ் 2 தமிழ் போட்டியாளர்கள் யார்?

Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. தமிழ் திரையுலகின் பல பிரபலங்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் பிக் பாஸ் போட்டி, கடந்த ஆண்டு தான் முதன் சீசன் தொடங்கியது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாவது அத்தியாயம் இன்று தொடங்குகிறது. பிக் பாஸ் தமிழ் 2வது (Bigg Boss 2 Tamil) பாகத்தையும் நடிகர் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

Advertisment

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  பல்வேறு துறைகளில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் இந்த வருடத்தின் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்க போகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கான முதல் பிரமோவை வெளியிட்டனர் சேனல் குழு.

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி பற்றிக் கடந்த வாரம் முழுவதும் 20 வினாடிகள் கொண்ட பிரமோக்கள் வெளியிடப்பட்டது. அதில், பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து கமல் ஹாசன் ஒரு சில க்ளூ நமக்குக் கொடுத்திருப்பார். அதனை அடிப்படையாகக் கொண்டு பல கோணங்களில் நாம் பலவற்றை யோசித்திருந்தோம். இந்த சூழலில், பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்க் நேற்றே முடிந்துவிட்டது.

Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தகவல்:

1. பவர் ஸ்டார் டாக்டர். ஸ்ரீநிவாஸன்

Tamil Bigg Boss 2 Contestants : பிக் பாஸ் தமிழ் 2ல் பவர் ஸ்டார் Tamil Bigg Boss 2 Contestants : காமெடியன் பவர் ஸ்டார்

‘பவர்-னு சொன்னாலே பவருக்கே ஷாக் அடிக்கும்’. தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார். பவர் ஸ்டார் என்று சொன்னாலே ரசிகர்கள் மத்தியம் உற்சாகம் அதிகரிக்கும். வெகு நாட்களாகத் தமிழ் சினிமாக்களில் இவரை  மிஸ் செய்த மக்களை மீண்டும் சந்திக்க பிக் பாஸ் தமிழ் 2 மூலம் வருகிறார் பவர் ஸ்டார்.

Bigg Boss 2 Tamil : பிக் பாஸ் தமிழ் 2 குறித்த செய்திக்கு: Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்! பிரமோ ரிலீஸ்!!!

பவர் ஸ்டார் பற்றி மட்டும் தெரிந்தால் போதுமா? அடுத்த ஆச்சரியம் காத்திருக்கிறது.

2. நடிகை மும்தாஜ்

Tamil Bigg Boss 2 Contestants : பிக் பாஸ் தமிழ் 2ல் நடிகை மும்தாஜ் Tamil Bigg Boss 2 Contestants: நடிகை மும்தாஜ்

தென் திரையுலகில் பலரின் இதயங்களை வசீகரித்தவர் மும்தாஜ். ‘மலே மலே மருத மலே’ பாடல் மூலம் வெகுவான வரவேற்பைப் பெற்றவரும் ஆவார். தனது கவர்ச்சியாலும் நடிப்பாலும் உல்லங்கள் கொள்ளை கொண்ட நாயகியாக இன்றும் வரவேற்கப்படுகிறார். சினிமாக்களில் அவ்வப்போது பார்க்கும்போதே மனதை ஸ்கிப் செய்ய வைக்கும் மும்தாஜ் தற்போது பிக் பாஸ் மூலம் தினமும் பார்க்கப்போகிறோம். இவரின் தரிசனத்திற்காக பலரும் காத்திருக்கிறார்கள் என்றே கூறலாம்

3. நடிகை ஜனனி ஐயர்

Tamil Bigg Boss 2 Contestants : பிக் பாஸ் தமிழ் 2ல் ஜனனி ஐயர் Tamil Bigg Boss 2 Contestants: நடிகை ஜனனி ஐயர்

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் மற்றொரு அழகு தேவதையாக வலம் வர இருக்கிறார் ஜனனி ஐயர். எத்தனையோ தமிழ் பாடல்களில் கண்களில் அழகு குறித்து வரிகள் அமைந்திருந்தாலும் அவை அனைத்தும் ஒருவருக்கே பொருந்தும் என்பது போன்ற கண்களைக் கொண்டவர் ஜனனி. கண்ணழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்த இவர், தற்போது பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியிலும் உலா வரப்போகிறார் எனத் தகவல்கள் கூறுகின்றது.

4. நடிகை யாஷிகா ஆனந்த

Tamil Bigg Boss 2 Contestants : பிக் பாஸ் தமிழ் 2ல் யாஷிகா ஆனந்த் Tamil Bigg Boss 2 Contestants: நடிகை யாஷிகா ஆனந்த்

மூக்குத்திக்குள் இப்படி ஒரு டுவிஸ்டு வைக்க முடியுமா என்பதற்கு உதாரணம் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ திரைப்படத்தில் நடித்திருந்தார் யாஷிகா. கவர்ச்சி நாயகியாகப் படம் முழுவதும் காட்சியளித்த இவரைக் கண்டு வியந்துபோகாத ஆட்களே இல்லை. ஒரே படத்தில் இவர் இவ்வளவு ஹிட் மற்றும் ஏராளமான ரசிகர்கள் என்றால் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்கு வந்தால்?

5. நடிகர் மஹத்

Tamil Bigg Boss 2 Contestants : பிக் பாஸ் தமிழ் 2ல் மஹத் Tamil Bigg Boss 2 Contestants: நடிகர் மஹத்

மங்காதா படத்தின் மூலம் பலருக்கும் அறிமுகமானவர் மஹத். இந்தப் படத்திற்கு முன்பு சிறிய கதாப்பாத்திரங்களில் மஹத் நடித்திருந்தாலும், இவருக்கான அங்கீகாரம் மங்காதா படத்தின் மூலமாகவே கிடைத்தது. பிறகு நடிகர் நடித்த ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாகவும் நடித்துள்ளார். பெண் ரசிகர்கள் அலை மோதும் இவருக்கு பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி பெரிய ஓபனிங் என்று சொல்ல வேண்டும்.

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கமல் ஹாசன் : வைரலாகும் ஃபோட்டோஸ்

6. தாடி பாலாஜி மற்றும் மனைவி நித்யா

Tamil Bigg Boss 2 Contestants : பிக் பாஸ் தமிழ் 2 தாடி பாலாஜி மற்றும் மனைவி நித்யா Tamil Bigg Boss 2 Contestants: நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி பிரமோவில், கமல் ஹாசன் ‘வீடு ரணகளம்’ எனக் கூறியது இதற்காகத்தானோ? சினிமா மற்றும் சின்னதிரை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார் அளித்தார். அன்று முதல் இன்று வரை இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகத் தகவல்கள் கூறுகின்றது. இவ்வாறு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியவர் தாடி பாலாஜி. திரைக்கு வெளியே இருக்கும்போதே எலியும் பூனையுமாக சண்டைப் போடுவார்கள். இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருவரும் இணைந்து இருக்கப் போகிறார்கள் என்றால் ரணகளம் தான். ஒரு வேளைப் பிரச்சனை அதிகமாகலாம் அல்லது அனைத்து மனஸ்தாபங்களும் நீங்கி இருவரும் இணையலாம். பார்ப்போம்...

7. நடிகை ரித்விகா

Tamil Bigg Boss 2 Contestants: நடிகை ரித்விகா Tamil Bigg Boss 2 Contestants: நடிகை ரித்விகா

மெட்ராஸ் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரித்விகா. இந்த படத்திற்கு பிறகு பெரும் அளவிற்கு ரசிகர்கள் இவருக்கு குவிந்தனர். இதற்கு அடுத்து ‘கபாலி’ படத்திலும் தனக்குரிய நடிப்பில் அனைவரையும் வியக்க வைத்திருப்பார் இவர். பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் இவரும் இடம்பெற்றுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

8. டேனியல் ஆனி போப் 

Tamil Bigg Boss 2 Contestants: நடிகர் டேனியல் போப் Tamil Bigg Boss 2 Contestants: நடிகர் டேனியல் போப்

‘ஃப்ரெண்டு....லவ் மேட்டரு....ஃபீல் ஆயிட்டாப்ல....ஹாஃப் சாப்டா கூல் அயிடுவாப்ல’ என்ற ஒரு டயலாக் போதும், இவரை அறிமுகப்படுத்த. ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் காமெடியனாக நடித்திருப்பார் டேனியல். இவருக்கு இந்த படம் முழுவதும் ஒரே டயலாக். அந்த ஒரு டயலாகிற்காகவே ரசிகர் பட்டாளம் இவரைச் சுற்றி இருந்தது. இவர் தற்போது பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.

9. வில்லன் நடிகர் பொன்னம்பலம்

Tamil Bigg Boss 2 Contestants : பிக் பாஸ் 2 தமிழ் வில்லன் நடிகர் பொன்னம்பலம் Tamil Bigg Boss 2 Contestants : வில்லன் நடிகர் பொன்னம்பலம்

பெற்றத் தாயை ‘தாய் கிழவி’ என்று அழைத்த முதல் நபர் பொன்னம்பலம். தமிழ் திரையுலகில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்த பலருள் இவரும் ஒருவர். இவர் நடித்த, முத்து, நாட்டமை, வள்ளல் மற்றும் அருணாச்சலம் படத்தை யாராலும் மறக்க முடியாது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறுகின்றனர். மிரட்டும் நபரா? சாந்தமானவரா? காத்திருங்கள்.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி மற்ற போட்டியாளர்கள் இவர்களா?

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் மேலே குறிப்பிட்டுள்ள 5 பேர் பங்குபெற இருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்தாலும், பவர் ஸ்டார் இருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. இருப்பினும் 90% மற்றவர்களை பிக் பாஸ் ரசிகர்கள் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் 16 பேரில் இவர்களை தவிர மற்றவர்கள் குறித்தும் சில விஷயங்கள் மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளது. நடிகர் கிருஷ்ணா, சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் ரியோ, சீரியல் நடிகர் கவின், சூப்பர் சிங்கர் அனந்த் வைத்தியநாதன், நடிகை ஐஸ்வர்யா டட்டா மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக நடிகர் கமல் ஹாசன், “இவங்களா வர்றாங்க... வீடு ரணகளம் தான்” என கூறியிருப்பார். அது ஒரு வேளைத் தாடி பாலாஜி மற்றும் அவரின் மனைவி நித்யாவுக்காக சொன்ன விஷயம் தான் எனக்கூடப் பல தகவல்கள் தெரிவிக்கின்றது.

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வீடு எப்படி இருக்கும் தெரியுமா?

எது எப்படியோ... இவ்வளவு நாள் பொறுமையோடு காத்திருந்தாயிற்று. இன்னும் ஒரே நாள் தானே.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment