Advertisment

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்! பிரமோ ரிலீஸ்!!!

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளை இரவு தொடங்க உள்ளது. இன்று அந்த நிகழ்ச்சியின் தொடக்க பிரமோ வெளியாகியுள்ளது.

author-image
Vaishnavi Balakumar
Jun 16, 2018 11:34 IST
Bigg Boss 3 Tamil

Bigg Boss 3

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளை இரவு 7 மணி முதல் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சிக்கான தொடக்க பிரமோவை பிக் பாஸ் டீம் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளை முதல் உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். 64 கேமராக்கள் சுற்றியிருக்க, ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கப் போகிறார்கள். இந்த பிரம்மாண்ட படைப்பின் 2வது சீசன் நாளை முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதற்கான ஷூட்டிங் மற்றும் போட்டியாளர்களின் அறிமுகம் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகிறது.

மற்ற செய்திகளுக்கு : Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கமல் ஹாசன் : வைரலாகும் ஃபோட்டோஸ்

இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியதன் பிரமோவை விஜய் தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் 2 பிரமோ தொடக்கத்தில் கமல் ஹாசன் அவர்கள் மேடைக்கு வருகை தர, அவரை ஆரவாரத்துடன் கரகோஷங்கள் எழுப்பி வரவேற்கின்றனர் மக்கள். பிறகு, நம் அனைவரையும் கமல் வரவேற்கிறார். ‘உள்ளே செல்பவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்?.. என்ன என்னை பார்க்குறீங்க நீங்க தான் முடிவு பண்ணனும்’ எனக் கூறி முடிவு செய்கிறார்.

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வீடு எப்படி இருக்கும் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி என்று சொன்னாலே மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் பிறக்கும். அதிலும் நாளை பிக் பாஸ் தமிழ் 2 தொடங்க உள்ளதால், பிரமோவுக்காகவே மக்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment