/tamil-ie/media/media_files/uploads/2018/06/Tamil-Bigg-Boss-Season-2.jpg)
Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி நாளை (ஞாயிறு) இரவு 7 மணிக்கு விஜய் டிவி சேனலில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் என்ற ஒற்றை நபருக்காகக் குவிந்த கூட்டம், இந்த ஆண்டு நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் கமல் ஹாசன் என்ற முறையில் பல எதிர்பார்ப்புக்களோடு காத்திருக்கிறார்கள் மக்கள்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மற்றும் கமல் ஹாசன் எண்ட்ரி : குறும் வரலாறு
Tamil Bigg Boss : பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் தொடக்கத்தில் கமல் ஹாசன் (Kamal Haasan in Season 1)‘உலக நாயகன்’ என போற்றப்படும் நடிகர் கமல் ஹாசன், தனது நீண்ட வருடங்கள் சினிமா வாழ்க்கைக்குப் பிறகு ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சிக்காக முதன் முதல் காலடி பதித்தது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தான். மிகவும் பிரபலமான நிகழ்ச்சியைத் தமிழில் கொண்டு வர முடிவு செய்தது சின்னதிரை குழு. பல்லாயிரக்கணக்கான மக்களை அற்புதமான நடிப்பாலும், பேச்சு திறனாலும் தன் வசமாக்கிக்கொண்டவர் கமல் ஹாசன். பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியை இவரையே முன் வைத்துத் தொடங்கினார்கள் விஜய் தொலைக்காட்சி சேனல். இவரின் பேச்சாலும், பாரபட்சமின்றி அனைவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் உண்மை குணத்தாலும் ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கை கூடியது. கமல் ஹாசனுக்காகவே மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கத்தொடங்கினர். வார இறுதி நாட்களில், தவறு செய்தவர்களை நாசூக்காகப் பேய் ஓட்டும் திறமையெல்லாம் கமல் ஹாசனுக்கே உரியது. இந்த முறையும், பிக் பாஸ் தமிழ் 2 சீசன் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் போட்டியாளர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களும் இவர் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆவது உறுதி.
(பிக் பாஸ் தமிழ் 2 சீசன் பற்றிய பிற செய்திகள் அறிய:)
(Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வீடு எப்படி இருக்கும் தெரியுமா?)
பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி செட்டில் கமல் ஹாசன்
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளைத் தொடங்க உள்ள நிலையில், கமல் ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் வீட்டின் கட்டமைப்பு பற்றிய செய்தியை நாம் முன்னதாகவே பார்த்தோம். இதனை அடுத்து பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கமல் ஹாசன் இருக்கும் புகைப்படங்களை பலரும் பார்த்து, ரசித்து வருகின்றனர்.
Tamil Bigg Boss Season 2: Kamal Haasan inside setகடந்த ஆண்டு கோட்டு சூட்டில், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த கமல் ஹாசன், இந்த ஆண்டு தனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றியுள்ளார். பழம்பெரும் நடிகர் நாகேஷ் அணியும் ஆடை போலவே உள்ளது கமல் ஹாசன் அணிந்திருக்கும் ஆடை. வெள்ளை சட்டை, சாம்பல் நிற பேண்ட், பேண்டில் இருந்து தோல் பகுதியைச் சுற்றி இருக்கும் பெல்ட், முறுக்கிய மீசை மற்றும் பொறிப்பறக்கும் கண்களுடன் உங்கள் முன் வந்து நிற்க உள்ளார் கமல் ஹாசன். வீட்டைச் சுற்றிப்பார்த்தோம்... வாருங்கள் பிக் பாஸ் செட்டிற்குள் கமல் ஹாசனை பார்ப்போம்.
Tamil Bigg Boss Season 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டின் கன்பஷன் அறைக்குள் கமல் ஹாசன் (Kamal Haasan inside Bigg Boss Confession room)பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வீட்டை சுற்றிக் காட்டியது போலவே பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியிலும் சுற்றிக்காட்டுகிறார். அப்போது கன்ஃபெஷன் ரூமில் அவர் இருக்கும்போது எடுத்த புகைப்படம் இது.
Tamil Bigg Boss Season 2: பிக் பாஸ் தமிழ் 2 செட் மேடையில் கமல் ஹாசன் (Kamal Haasan inside Bigg Boss Stage set)பிக் பாஸ் தமிழ் 2 சீசன் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பேசும் மேடை செட், வீட்டின் பக்கத்தில் இருக்கும் மைதானத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் மேடை உள்ளே நுழைந்து ஆடியன்ஸை கமல் வரவேற்கிறார். அப்போது எடுக்கப்பட்ட காட்சிதான் இது.
Tamil Bigg Boss Season 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி மேடையில் கமல் ஹாசன். (Kamal Haasan inside Bigg Boss set)பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி மேடையில் கமல் ஹாசன் தனது இரு கரங்களையும் விரித்து அனைவரையும் நிகழ்ச்சிக்குள் வரவேற்கிறார்.
Tamil Bigg Boss Season 2: பிக் பாஸ் தமிழ் 2 மேடையில் நிகழ்ச்சியை தொடங்குகிறார் கமல் ஹாசன் (Kamal Haasan inside Bigg Boss set)பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில், ‘நேரமாச்சு நிகழ்ச்சிக்குள் செல்வோமா’ என கூறுப்படி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் கமல் ஹாசன்.
இந்த புகைப்படங்களை பார்க்கும்போது நிகழ்ச்சி ஏற்கனவே தொடங்கி விட்டது, போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார்கள் என தெரிகிறது. பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் தொடக்கத்தை நாளை உலகெங்கும் இரவு 7 மணிக்கு காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us