Bigg Boss Tamil Season 3 : பிக்பாஸ் மூன்றாம் பாகத்தின் முதல் நாள் இன்று தொடக்கம்! ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Bigg Boss Tamil Season 3 : பிக்பாஸ் சீசன் 3 முதல் நாள் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது

Bigg Boss Tamil Season 3 : பிக்பாஸ் சீசன் 3 முதல் நாள் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg boss tamil season 3 when and where to watch, Vijay TV, Hotstar - பிக்பாஸ் மூன்றாம் பாகத்தின் முதல் நாள்! ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Bigg boss tamil season 3 when and where to watch, Vijay TV, Hotstar - பிக்பாஸ் மூன்றாம் பாகத்தின் முதல் நாள்! ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Bigg Boss Tamil Season 3 : பிக் பாஸ் தமிழ் சீசனின் மூன்றாம் பாகம் இன்று (ஜூன்.23) முதல் தொடங்குகிறது.

Advertisment

ஆரம்பிச்சிட்டாய்ங்களா!!? என்ற உங்கள் குரல் எங்களுக்கு கணீரென்று கேட்கிறது. வழக்கம் போல், கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஆரவாரமாக, ஆர்ப்பாட்டமாக இன்று தொடங்குகிறது பிக் பாஸ்.

பிக் பாஸ் தமிழை பொறுத்தவரை, முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னரானார். அந்த சீசன் ஏகத்துக்கு ஹிட்டானது. ஓவியா, ரைஸா, காயத்ரி ரகுராம், சினேகன், ஷக்தி என்று அனைத்து பாத்திரங்களும் மிக நேரத்தியாக பிக் பாஸ் வீட்டினை கையாள, ஒவ்வொருவருக்கும் என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஓவியா தனது கேரக்டருக்காக கொண்டாடப்பட, ரைஸா தனது அழகுக்காகவே ரசிகர்களை ஈர்த்தார். ஆனால், ஆரவ் பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார்.

மேலும் படிக்க - Bigg Boss Tamil Season 3 Live Updates : பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்கள் யார்? முழு லிஸ்ட் பார்க்கணுமா? லைவ் அப்டேட்ஸ் இதோ!

Advertisment
Advertisements

ஆனால், இரண்டாவது சீசன் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, மும்தாஜ், மஹத், சென்ட்றாயன், டேனியல், பொன்னம்பலம் என்று பல கேரக்டர்கள் இருந்தாலும், முதல் சீசன் போல் ஹிட்டடிக்கவில்லை. ஆனால், ரித்விகா மட்டும் மக்கள் மனதை வெல்ல, டைட்டிலையும் சேர்த்து வென்றார்.

Bigg Boss Tamil Season 3 Bigg Boss Tamil Season 3

Bigg Boss Tamil Season 3 Live : பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

இந்நிலையில், இன்று மூன்றவாது சீசன் தொடங்குகிறது. இதில், கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்த உள்ளார்.

வழக்கம் போல், விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசனை நேயர்கள் கண்டுகளிக்கலாம். தினம் 60 நிமிடமும், வார இறுதியில் 90 நிமிடம் என நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பதாக தெரிகிறது. ஆன்லைனில் பார்க்க வேண்டுமெனில், ஹாட்ஸ்டாரில் நேயர்கள் கண்டு களிக்கலாம்.

இன்றைய முதல் நாள் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

Kamal Haasan Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: