விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் – 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா, சில நாள்களாக பலருடன் மோதல் போக்கை கையாள்வதை காண முடிந்தது. குறிப்பாக, அண்ணாச்சி, தாமரை செல்வி,அக்ஷரா என மூவரையும் ரவண்ட் கட்டும் பிரியங்கா, இன்றைய இரண்டு ப்ரோவிலும் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.
பிரியங்கா - தாமரை மோதல்
முதல் புரமோவிலே பிரியங்காவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. இதில் பேசும்போது பிரியங்கா 'யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப கூடாது என தற்போது தெரிந்து இருக்கிறது' என கூறுகிறார்.
அதன் பிறகு பேசும் தாமரையிடம் 'பிரியங்கா எந்த மாதிரி friend உங்களுக்கு' என அபிஷேக் கேட்கிறார். அவர் எனக்கு friend கிடையாது. நம்ம பேச்சு மட்டும் தான் உயர்ந்து இருக்கனும், மத்தவங்க எல்லாம் நமக்கு கீழ தான் என நினைப்பது பிரியங்கா தான்" என தாமரை குற்றம்சாட்டுகிறார்.
பிரியங்காவை வெளுத்து வாங்கிய தாமரை
ஆனால், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், இருவரின் சண்டையில் பிக்பாஸ் வீட்டில் பிரளலயமே ஏற்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் பேசும் பிரியங்கா, இந்த வீட்டில் சில பேர் ஒன்னு பண்றாங்க… அதுக்கப்புறம் பின்னாடி இன்னொன்னு பேசுறாங்க என்று கூறுகிறார்.
நல்லா சிண்டு முடிச்சுவிடுறீயே
தொடர்ந்து பேசும் தாமரை செல்வி, "நீ சிண்டு முடிச்சு பேசுறதுலேயே குறியா இருக்க, செமயா பண்ற நீ… பயங்கரமா பண்ற நீ… நான் கூட என்னவோன்னு நினைச்சேன்.. என்று கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் தாமரை செல்வி, ஒருத்தர் பாசமா இருந்தா போய் பொழிவ… ஜில் ஜில்ன்னு… என்று பிரியங்காவை கிண்டலடிக்கிறார். மேலும் உன் பேச்சை தட்டிப் பேசினால் என்னை மட்டம் தட்டுவீயா என்று பாவனியிடம் பிரியங்கா குறித்து கூறி நியாயம் கேட்பது போல் இன்றைய எபிசோட் நிறைவுபெறுகிறது.
இரண்டு ப்ரோமோவிலும் பிரியங்கா vs தாமரை செல்வி போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. களைக்கட்டு ப்ரோமோவால் இன்றைய எபிசோட் நிச்சயம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.