ரூ1 கோடி மதிப்பு… பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் அக்ஷராவுக்கு கிடைத்த பரிசு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை அக்‌ஷராவுக்கு ரூ.1 கோடி மதிப்பில் பரிசு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு மீது அமர்ந்தபடி இருக்கிற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss tamil season 5 Akshara, bigg boss tamil 5, bigg boss akshara reddy, actress akshara, bigg boss akshara gets rs 1 crore gifts, akshara got 1 crore benz car gift, பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் அக்ஷராவுக்கு கிடைத்த ரூ1 கோடி மதிப்பு பரிசு, பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் அக்‌ஷராவுக்கு 1 கோடி கார் பரிசு, actress akshara, tamilandu, tamil news, bigg boss news

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை அக்‌ஷராவுக்கு ரூ.1 கோடி மதிப்பில் பரிசு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த இந்த விலை உயர்ந்த பரிசு மீது அமர்ந்தபடி இருக்கிற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் நடிகை அக்‌ஷராவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்கள் இருந்த அக்‌ஷரா கடந்த வாரம் மக்கள் குறைவான வாக்குகள் அளித்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அக்‌ஷரா, அவருடன் சக போட்டியாளராக இருந்து வெளியேறிய வருண், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் பொழுதை கழித்து வருகிறார்.

மாடலிங் அழகியாக தனது பணியைத் தொடங்கிய இண்டர்நேஷன்ல் பியூட்டி பேஜன்ட் பரிசு பெற்றுள்ளார். 2019ம் ஆண்டு மிஸ் சூப்பர் குளோப் இந்தியா, மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் பட்டம் வென்றுள்ளார். இப்படி மாடலிங்கில் வெற்றிப் பயணத்தை தொடர்ங்கிய அக்‌ஷரா, 2018-ம் ஆண்டு வெளியான ‘காசு மேல காசு’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து, பில் கேட்ஸ் என்ற கன்னட சினிமாவில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், நடிகை அக்‌ஷரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, குயின் ஆஃப் வில்லா டூ வில்லேஜ் பட்டம் வென்றார்.

இந்த நிலையில்தான், விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அக்‌ஷரா மேலும் பிரபலமாகை ஏராளமன ரசிகர்களைப் பெற்றார். பிக் பாஸ் ஃபைனல் வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்‌ஷரா, 80 நாட்களிலேயே வெளியெற்றப்பட்டார்.

தற்போது அக்‌ஷரா நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். அக்‌ஷரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்ததும் அவருடைய அண்ணன் அவருக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பரிசின் விலை ஒரு கோடி ரூபாய் என்பதை அறிந்து அவருடைய ரசிகர்கள் வியந்துபோயுள்ளனர்.

அக்‌ஷராவுக்கு அவருடை அண்ணன் பென்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார். அந்த காரின் மீது அக்‌ஷரா அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்று ஜாக்பாட் அடித்த அக்‌ஷராவுக்கு, பிக் பாஸில் இருந்து வந்ததும் அவருடைய அண்ணனிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பென்ஸ் கார் பரிசாக பெற்றுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil season 5 akshara gets rs 1 crore gift

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com