New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/bb.jpg)
அமீர் தனது அம்மா பேரழகி என கூறினார். அது உண்மை தான் பெரிய பேரழகிதான் என்று கண்ணீரோடு அவர் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையவாசிகள் ஷேர் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கும் முதல் டாஸ்கே கடந்த வந்த பாதை தான். அதன்படி, இந்த முறையும் சீசன் 5இல் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களும் கதைகளை கூறினர்.
இந்நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ள வந்த சஞ்சீவ், அமிர் இருவரும், தங்களது கடந்தகால பாதையை இந்த வாரம் கூறினர்.
முதலாவதாக சஞ்சீவ் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் அவருடைய அக்காவின் இறப்பு பற்றியும், பின்னர் சந்தித்த கஷ்டங்களையும் பற்றியும் பேசினார்.
அடுத்து வந்த அமீரின் கதை, போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களை பீல் பண்ண செய்தது. சிறு வயது முதலே அப்பாவை பார்க்காமல் வளர்ந்த அமீர், தாயாரின் அரவனைப்பில் வளர்கிறார். ஆனால், ஒருநாள் அவரது தாயார் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை நேரில் பார்த்ததாக கூறும் அமீர், அடுத்த நடந்த விஷயத்தை சொல்லாமல் மறுத்துவிட்டார். பெற்றோர் இன்றி தனியாக நின்ற அமீர், பின்னர் நல்லுள்ளங்கள் கொண்ட சிலரின் உதவியுடன் தற்போது இந்த இடத்தில் இருப்பதாக கூறினார்.
கடந்த சில நாள்களாக பாவனி பின்னால் செல்வதை மட்டுமே அமீர் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் உலாவிய நிலையில், தற்போது முற்றிலும் மாறியுள்ளது. பலரும் அமீரின் கதையை கேட்டு மனமுருகி ட்வீட் செய்து வருகின்றனர்.
ஒரு சிலர், அமீர் பேசுகையில் தனது அம்மா பேரழகி என கூறினார், ஆனால் அது உண்மை தான் பெரிய பேரழகிதான் என்று கண்ணீரோடு அவர் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.