தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்வையாளர்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் தொடங்குவதற்கு முன்பும், போட்டியாளர்களாக கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் வெளியாகி வைரலாகும். தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் பட்டியல் என ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு பல டாஸ்க்குகள் கொடுக்கப்படும். விதிமுறைகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள். இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் இருந்து டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து 5-ம் சீசன் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான், பிக் பாஸ் சீசன் 5 புரோமோ ஷூட்டிங் நடந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பட்டியலில், குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், நடிகர் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, லட்சுமி ராமகிருஷ்ணன், செய்தி வாசிப்பாளர் கண்மணி, டிக் டாக் ஜி.பி. முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"