பிக் பாஸ் வீட்டில் ரகளை: பொய் பேசறது யாரு? பாவனியை அடிக்கப் பாய்ந்த தாமரை!
பிக் பாஸ் வீட்டில் பொய் பேசியது யாரு, என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இந்த வாரம் கமல்ஹாசன் யார் மீது தவறு என்று ஒரு குறும்படம் போட்டு காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை எந்த சர்ச்சையும் இல்லாமல் நடந்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக உள்ள தாமரைக்கும் பாவனிக்கும் இடையே ஒரு பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த தாமரை, பாவனியை அடிக்கப் பாய்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கியுள்ளது.
Advertisment
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதுவரை நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் எலிமினேஷனில் வெளியேறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இதுவரை எந்த சர்ச்சையும் பரபரப்பு நடக்காததால் இந்த சீசன் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்து வருவதாக ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்தனர்.
இருப்பினும், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி 4 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. நேற்றைய எபிசோடு (நவம்பர் 5) தீபாவளி கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியது.
இந்த நிலையில்தான், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி இன்று வெளியிடப்பட்ட 3வது புரமோவில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக உள்ள தாமரைக்கும் பாவனிக்கும் இடையே ஒரு பெரிய சண்டை ஏற்பட்டதையடுத்து, ஆத்திரம் அடைந்த தாமரை, பாவனியை அடிக்கப் பாய்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கியுள்ளது.
பாவனி ஏதோ ஒன்றை பேச, தாமரை எனக்கு பொய் சொன்னா புடிக்காது புள்ள என்று கூறி பாவனியை கடுமையாகப் பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தாமரை பாவனியை அடிக்கப் பாய்கிறார். மற்ற போட்டியாளர்கள் இருவரையும் விலக்கி சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார்கள். பாவனியும் கைகளை நீட்டி பதிலுக்கு சத்தமாக பேசுகிறார். கிட்டத்தட்ட ஒரு தள்ளு முள்ளு நடந்ததாகவே தெரிகிறது. இதனால், பிக் பாஸ் வீட்டில் பொய் பேசியது யாரு, என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இந்த வாரம் கமல்ஹாசன் யார் மீது தவறு என்று ஒரு குறும்படம் போட்டு காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"