விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை மற்ற சீசன்களைப் போலவே, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் சீசன் 6 போட்டியில், அசீம், விக்ரனம், ஷிவின், ரட்சிதா, ஆயிஷா, ஜி.பி. முத்து, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ராம், கதிர், ஏடிகே, ஜனனி, மகேஸ்வரி, மணிகண்டன் உள்பட மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியாளர்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் 105 நாட்கள் இறுதி வரை இருப்பவர்களில் ஒருவரை மக்கள் வாக்கெடுப்பு மூலம் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 6 போட்டியில், பலரும் வெளியேற்றப்பட்டனர். கதிர் பணப் பெட்டியுடன் வெளியேறினார். அமுதவாணனும் பணப்பெட்டியுடன் வெளியேறினார். பிக் பாஸ் சீசன் 6 போட்டியில், 105வது நாளில் பிக் பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 3 பேர் மட்டுமே இருந்தனர்.
இவர்களில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. பிக் பாஸ் இந்த சீசன் தொடங்கி 8 வாரங்களிலேயே இந்நிகழ்ச்சி அசீம் vs விக்ரமன் என்று இரு துருவ நிகழ்ச்சியாக மாறிவிட்டது. அசீம் டிவி சீரியல் நடிகர், விக்ரமன் அரசியல்வாதி (விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்). அசீமீன் ஆக்ரோஷமான கோபம் கொந்தளிப்பு, விக்ரமனின் தன்மையான நிதானமான அறம் வெல்லும் என்ற போக்கு என சென்றது.
இந்நிலையில், பிக்பாஸ் 6 வது சீசன் 105வது நாள் இறுதிப்போட்டியில், அசீம் டைட்டிலை வென்றார். அவருக்கு 50 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. மேலும், ஒரு மாருதி சுஜுகி பிரெஸ்ஸா கார் அளிக்கப்பட்டது. விக்ரமன் 2வது இடத்தைப் பிடித்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நிலவிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை அசீம் வென்றது குறித்து விக்ரமன் மக்கள் தீர்ப்பை மனமார ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.