scorecardresearch

Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளாராக நுழைந்த ஜி.பி.முத்து; உங்கள் வழக்கமான பாணியில் யாரையும் திட்டக் கூடாது என கமல்ஹாசன் அறிவுறுத்தல்

Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளாராக நுழைந்த ஜி.பி.முத்துவிடம், உங்கள் வழக்கமான பாணியில் யாரையும் திட்டக் கூடாது என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இதையும் படியுங்கள்: நயன்தாரா- விக்கி ஜோடிக்கு இரட்டைக் குழந்தை: திருமணமான 4 மாதத்தில் ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக்

இந்த நிகழ்ச்சி இன்று துவங்கி 100 நாட்கள் நடைபெறவுள்ளது. ஆண், பெண் மற்றும் திருநங்கை என 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிரபல யூடியூபர் ஜி.பி முத்து நுழைந்துள்ளார். இவர் டிக்டாக் மற்றும் ரீல்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.

முதல் போட்டியாளாராக நுழைந்த ஜி.பி.முத்துவிடம் தொகுப்பாளர் கமல்ஹாசன் உரையாடினார். அப்போது, ஜி.பி முத்து குறித்த காணொளி ஒளிப்பரப்பபட்டது. பின்னர் பேசிய ஜிபி முத்து தான் ஆரம்பத்தில் விளையாட்டாக டிக்டாக்கில் வீடியோ போட ஆரம்பித்ததாகவும், பின்னர் நாளடைவில் அந்த அடிமையாகி ஒரு நாளைக்கு 75 வீடியோ போடும் அளவுக்கு தீவிரமாக அதிலேயே மூழ்கிவிட்டதாக தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்டது, மேலும் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் வருமானமின்றி தவித்து விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றதாக கூறி கண்கலங்கினார். பின்னர் யூடியூப்பில் வீடியோ போடுமாறு உறவினர்களும் நண்பர்களும் ஊக்கம் அளித்ததை அடுத்து தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டி வீடியோ போட்டதாகவும், அவர் பேச்சு, வட்டார மொழியில் சரளமாக அவர் திட்டுவதும் மக்களை வெகுவாக கவர்ந்ததால் அவரது வீடியோவுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாகவும் ஜி.பி முத்து தெரிவித்தார்.

மேலும், தனக்கு நான்கு குழந்தைகள், தம்பி இறந்துவிட தம்பியின் குடும்பத்தையும் இரண்டு குழந்தைகளையும் பராமரித்து வருவதாக ஜி.பி முத்து தெரிவித்துள்ளார். மேடையில் அவரது குடும்பத்தினர் வந்திருந்து அவரை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஜி.பி முத்து வீட்டிற்குள் செல்லும் முன், உங்கள் வழக்கமான ஸ்டைலில் யாரையும் திட்டக்கூடாது என்று அவருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil season 6 kamalhassan advices gp muthu