ரவீனா தாஹா, கூல் சுரேஷ் முதல் அக்ஷயா உதயகுமார் வரை... பிக் பாஸ் தமிழ் 7 போட்டியாளர்கள் பயோடேட்டா

சரவண விக்ரம், மாயா கிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார் முதல் பவா செல்லத்துரை வரை; பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் பின்னணி இங்கே

சரவண விக்ரம், மாயா கிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார் முதல் பவா செல்லத்துரை வரை; பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் பின்னணி இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg boss 7 tamil

சரவண விக்ரம், மாயா கிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார் முதல் பவா செல்லத்துரை வரை; பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் பின்னணி இங்கே

கோலாகலமாக தொடங்கியுள்ளது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள போட்டியாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது இங்கே

Advertisment

கூல் சுரேஷ்

திருடா திருடி, காக்கா காக்கா மற்றும் மச்சி படத்தில் நடித்த கூல் சுரேஷ், பிக் பாஸ் தமிழ் 7 இன் முதல் போட்டியாளர் ஆவார். கூல் சுரேஷ் தனது வித்தியாசமான திரைப்பட விளம்பரங்களுக்காக பிரபலமானவர். சமீபத்தில், சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் தனது சர்ச்சைக்குரிய செயலால் செய்திகளில் இருந்தார். கடுமையான பின்னடைவைச் சந்தித்த அந்த நிகழ்வில் கூல் சுரேஷ் நிகழ்ச்சியின் தொகுப்பாளனிக்கு வலுக்கட்டாயமாக மாலை அணிவித்தார். பின்னர், கூல் சுரேஷ் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், "நான் மிகவும் சாதாரணமானவன். சிம்பு மற்றும் சந்தானத்தால் தான் நான் இங்கு இருக்கிறேன்" என்று மேடையிலேயே உடைந்து அழுதார்.

கூல் சுரேஷ் சிங்கம் புலி போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். படித்தவுடன் கிளித்து விடவும் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு சாக்லேட் திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் அடுத்ததாக சித்திரமே சொல்லடி படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment
Advertisements

பூர்ணிமா ரவி

யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி வேலூரைச் சேர்ந்தவர். ஐ.டி துறையில் பணிபுரிந்த அவர், தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

ரவீனா தாஹா

ராட்சசன் படத்தின் மூலம் புகழ் பெற்ற ரவீனா தாஹா, நடன நிகழ்ச்சியுடன் சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். இன்ஸ்டாகிராமில் (1.7 மில்லியன் பின்தொடர்பவர்கள்) பெரும் ரசிகர்களைக் கொண்ட ரவீனா, மௌன ராகம் சீசன் 2 போன்ற பிரபலமான தமிழ் சீரியலில் நடித்துள்ளார். ரவீனா தாஹாவுக்கு 19 வயது, மேலும் இந்த சீசனில் இளைய போட்டியாளராக இருக்கலாம்.

பிரதீப் ஆண்டனி

முன்னாள் போட்டியாளர் கவினின் நண்பர். அவருடன் டாடா படத்தில் நடித்துள்ளார். கவின் போட்டியாளராக இருந்தப்போது, நண்பராக வீட்டுக்குள் வந்த அவருக்கு அறை கொடுத்ததன் மூலம் பிரபலமானவர்

ராப்பர் நிக்சன்

ராப்பர் நிக்சன் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் முகேன் ராவின் ஆல்பமான ஒத்த தாமரை உட்பட பல பாடல்களில் நிக்சன் பணியாற்றியுள்ளார்.

வினுஷா தேவி

விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ரோஷினி ஹரிபிரியனுக்குப் பதிலாக கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை வினுஷா தேவி. இவர் தனது ப்ரோமோ வீடியோவில், தனது கருமையான சருமத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறினார். மேலும், அதனால் பலமுறை நிராகரிக்கப்பட்டேன். இருப்பினும், அந்த நிலையை மாற்ற போராட விரும்புகிறேன் என்றும் வினுஷா கூறினார்.

மணி சந்திரா

ஒரு காலத்தில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஸ்பூஃப் வீடியோவை உருவாக்கிய நடனக் கலைஞர் மணி சந்திரா, இப்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ரீல்களுக்காக பிரபலமானவர். விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடன கலைஞராகவும், நடன இயக்குனராகவும் இருந்துள்ளார்.

அக்‌ஷயா உதயகுமார்

கடந்த ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான லவ் டுடே படத்தில் நடித்தவர் அக்‌ஷயா உதயகுமார். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு இவானா ஜோடியாக நடித்திருந்தார், இவானாவின் சிஸ்டராக நடித்தவர் தான் அக்ஷயா உதயகுமார், இவர் அந்த திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜோவிகா விஜயகுமார்

முன்னாள் போட்டியாளரான நடிகை வனிதா விஜயகுமாரின் மகள். வனிதாவுடன் சேர்ந்து யூடியூபில் சமையல் வீடியோக்கள் பதிவேற்றுவதன் மூலம் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர்.

ஐஷூ

பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர் அமீரின் சகோதரி தான் இந்த ஐஷு ஏ.டி.எஸ். ஊட்டியைச் சேர்ந்த நடன கலைஞரான இவர் விஜய் டிவியின் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஐஷூ தற்போது பிக் பாஸ் போட்டியில் களமிறங்கியுள்ளார். அவர் ஒரு பயண ஆர்வலர் மற்றும் பல்வேறு இடங்களை ஆராய்வதை விரும்புகிறார்.

விஷ்ணு விஜய்

விஜய் டிவியின் வெற்றிகரமான பள்ளி நாடகமான கனா காணும் காலங்கள் சீரியலில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் விஷ்ணு விஜய். பின்னர் விஷ்ணு சத்யா, ஆபிஸ் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

மாயா கிருஷ்ணன்

பன்முக கலைஞரான மாயா கிருஷ்ணன் விக்ரம் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். சில வெப் தொடர்களில் நடித்துள்ள மாயா கிருஷ்ணன், கௌதம் மேனனின் நீண்ட கால தாமதமான துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்

சரவண விக்ரம்

பாண்டியன் ஸ்டோர்ஸில் நான்கு தம்பிகளில் கடைக்குட்டியாக நடித்து வருபவர் சரவண விக்ரம்.

பாடகர் யுகேந்திரன்

பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன். திரைத்துறையில் சில பாடல்கள் பாடியுள்ளார். வில்லன் நடிகராகவும் மிரட்டியவர்.

விசித்ரா

90களில் பிரபலமான கவர்ச்சி நடிகையான நடிகை விசித்ரா, சமீபத்தில் தனது யூடியூப் வீடியோக்கள் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு திரும்பினார். சத்யராஜின் அமைதி படை மற்றும் ரஜினியின் முத்து ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விசித்ரா. சமீபத்தில் குக் வித் கோமாளியில் மூன்றாம் இடம் பிடித்தவர்.

பவா செல்லத்துரை

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முதல் எழுத்தாளர் பவா செல்லத்துரை. தனது சிறந்த புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்

அனன்யா ராவ்

அனன்யா ராவ் மற்றும் அவரது இரட்டை சகோதரி அபூர்வா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் நடன வீடியோக்களுக்காக மிகவும் பிரபலமானவர்கள். அனன்யா பின்னர் நெட்ஃபிக்ஸ் ரியாலிட்டி ஷோ இன் ரியல் லவ்வின் ஒரு பகுதியாக இருந்தார்.

விஜய் வர்மா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணிபுரிந்து வருபவர் நடனக் கலைஞரும் நடிகருமான விஜய் வர்மா. விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் டான்ஸராக பணியாற்றி, தற்போது திரைப்படங்களில் பணியாற்றி வருபவர். திருச்சியைச் சேர்ந்தவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: