Advertisment

'புல்லி கேங்'... தோல்வி விரக்தியில் மாயா போட்ட பதிவுக்கு ரசிகர்கள் ரீ-ஆக்சன்

இந்த சீசனில் டைட்டில் வின்னர் வாய்ப்பை தவறவிட்ட மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் ஐசு, அனன்யா, பூர்ணிமா மூவரையும் கட்டியணைத்தபடி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Bigg Boss tamil season 7 grand finale Fans reaction to maya insta post Tamil News

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த கமலின் "விக்ரம்" பட நடிகை மாயாவுக்கு அவர் கொடுத்த ஆதரவு சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் எள்ளி நகையாடும் விதம் இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7வது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது.

Advertisment

வழக்கம் போல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அரங்கேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா, விசித்ரா, பூர்ணிமா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு, கூல் சுரேஷ்,  பாவா செல்லதுரை, அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இவர்களுக்கு இடையில் பல சண்டைகள், சர்ச்சைகள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனே தொகுப்பாளராக இருந்தார். ஆனால், கடந்த 6 சீசன்களை காட்டிலும், இந்த சீசனில் அவரது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. குறிப்பாக, பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த கமலின் "விக்ரம்" பட நடிகை மாயாவுக்கு அவர் கொடுத்த ஆதரவு சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் எள்ளி நகையாடும் விதம் இருந்தது. 

நேற்று மாலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசனின் இறுதி போட்டி நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டிக்கு விஷ்ணு, மாயா, அர்ச்சனா, மணி, தினேஷ் ஆகியோர் நுழைந்தனர். டிக்கெட் டு பைனல் டாஸ்கில் வெற்றிபெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தார் விஷ்ணு. வாக்குகளின் அடிப்படையில் மற்ற நான்கு போட்டியாளர்கள் தேர்வானார்கள். 

இறுதியில், அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வானார். இதன்மூலம் வைல்டு கார்ட் என்டரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பட்டம் வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார் அர்ச்சனா. இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பெற்றார். டைட்டில் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ50 லட்சமும், மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரும் பரிசாக வழங்கப்பட்டன. அத்துடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

மாயா இன்ஸ்டா போஸ்ட் 

இந்நிலையில், இந்த சீசனில் டைட்டில் வின்னர் வாய்ப்பை தவறவிட்ட மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில்  ஐசு, அனன்யா, பூர்ணிமா மூவரையும் கட்டியணைத்தபடி, "கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல...?" என்று கேள்விக்குறியோடு கேப்ஷன் போட்டிருந்தார். 

இந்த நிலையில், மாயாவின் இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளே பலபேர் பேசிக் கொண்டிருந்தார்களே அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் மூன்று பேரோடு மட்டும் ஏன் இந்த திடீர் போஸ்ட் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும் ஒரு சில ரசிகர்கள் உங்கள் அணியில் கரப்பான் பூச்சி என்று நீங்கள் அழைத்தாலும் கண்டுகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த விக்ரம் கூட உங்கள் அணியில் ஒரு ஆளு கிடையாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment