Bigg Boss Tamil: விஜய் டி.வி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எதிர்பாராத திருப்பம் இந்த வார இறுதி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடந்ததாக ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள். இதுவரையில் மாயா டீம் பேசிய பல வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் இருந்த கமல்ஹாசன் இந்த வார இறுதி நாட்களில் தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு, மணி போன்றோரை கட்டம் கட்டி அவர்கள் பேசியது எல்லாமே தவறு என்று அவர்களையே சொல்ல வைத்தார்.
இது அதிகமானோரால் திட்டப்பட்டு வந்திருந்தாலும் ஒரு சிலர் கமல் செய்ததும் சரிதான் என்று பாராட்டியும் வருகின்றனர். இப்படியாக இருவேறு கருத்துகளை பெற்றிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தௌலத் என்று சொல்லி தினேஷ் நிக்சனை பார்த்து பேசியதற்கு கமல்ஹாசன் இது நீங்கள் வடசென்னையை இவர்கள் இப்படித்தான் என்று முத்திரை குத்துவது போன்று பேசி இருக்கிறீர்கள் என்று விளக்கம் கொடுத்தார்.
இதேபோல், மணி நிக்சனை பார்த்து ட்ரூ கலர் கம்மிங் என்று சொன்ன வார்த்தைக்கும் நீங்கள் அவரை சார்ந்த மக்களை குறிப்பிடுவது போன்று இருக்கிறது என்றும் விளக்கத்தை கொடுத்திருந்தார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் சனிக்கிழமை எபிசோடில் பேசிக் கொண்டிருக்கும்போது இடைவேளை நேரத்தில் பூர்ணிமா தனக்கும் இதேபோல இந்த வீட்டில் இரண்டாவது வாரமே பிராண்டு குத்துகிற வேலை நடந்தது என்று குறிப்பிட்டார்.
அதாவது ஒரு முறை கூல் சுரேஷ் என்னிடம் நீ மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன் அவர் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டு மாட்டுக்கறி நீ சாப்பிடுவியா என்று மீண்டும் கேட்டார். நாம் ஆமாம் சாப்பிடுவேன் என்று சொன்னேன். அதற்கு அப்படியா நான் எல்லாம் சாப்பிட மாட்டேன் என்று அவருடைய முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேசினார்.
அது கமல்ஹாசன் இப்போது சொல்ற மாதிரி பிராண்ட் குத்தற வேலைதான். எனக்கு அது ஆரம்பத்திலேயே நடந்தது என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இதை கவனிக்காமல் விட்டு விட்டாரா அல்லது இதை கவனித்தால் சுரேஷிற்கு சனிக்கிழமை சரியான பாடம் எடுத்திருப்பார்.
யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்க முடிவு பண்ணக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பார். ஆனால் கமல்ஹாசன் இதை எப்படி சொல்லாமல் விட்டார் என்பது பலருடைய கேள்விவாக உள்ளது. இதேபோல், கூல் சுரேஷ் ஒருவேளை சொன்னதால் விட்டுவிட்டாரோ இதையே தினேஷ், அர்ச்சனா அல்லது விஷ்ணுவோ சொல்லியிருந்தால் கண்டிப்பாக இந்த வாரத்தில் கேள்வி கேட்டிருப்பாராக இருக்குமோ என்றும் சில இணைய வாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“