/indian-express-tamil/media/media_files/zs5BlDVALYEZRUKOYEcQ.jpg)
நடிகை வனிதா விஜயகுமாரின் விளக்கம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
Bigg Boss Tamil : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா களம் கண்டுள்ளார்.
இவர் பற்றிய பல்வேறு தகவல்களை பலரும் அலசி ஆராய்ந்து வருகின்றனர். பள்ளி மாணவியான ஜோவிகாவும் பல்வேறு விஷயங்களை துவைத்து காயப்போடுவதில் கில்லாடியாகதான் உள்ளார்.
இந்த நிலையில் ஜோவிகா தனது பாட்டனார் விஜயகுமார் பெயரை தனக்கு பின்னால் பயன்படுத்துகிறார். அதாவது வனிதா தனது தந்தை பெயரான விஜயகுமாரை பின்னால் பயன்படுத்துவது போல் ஜோவிகாவும் பயன்படுத்துகிறார்.
இது தற்போது விவாதப் பொருளாகி உள்ளது. பலரும் இது தொடர்பாக ஜோவிகாவிடம் கேள்விகள் எழுப்பிவருகின்றனர். இந்த நிலையில் ஜோவிகா தனது பாட்டனார் பெயரை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என வனிதா விஜயகுமார் கேள்வியெழுப்பி உள்ளார்.
சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக செயல்படுபவர் நடிக வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் உடன் சந்திரலேகா என்ற படத்தில் நாயகியாகவும் நடித்தவர் ஆவார். இதனால் இவர் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரீட்சயமானவர்தான்.
எனினும், ஜோவிகாவின் தந்தை குறித்தும் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக போல்ட்டாக பேசிய வனிதா விஜயகுமார், “கரீனா கபூர், ஆமிர் கான், சல்மான் கான்” இவர்கள் பயன்படுத்தும்போது நாங்கள் பயன்படுத்தக் கூடாதா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
தொடர்ந்து, “ஜோவிகாவின் தந்தை ஆகாஷ்தான் எனக் கூறியுள்ள வனிதா விஜயகுமார் நாங்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டோம். சிலர் சந்தர்ப சூழ்நிலையால் குடும்ப பெயரை பயன்படுத்துகின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜோவிகாவின் தந்தை ஆகாஷ் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; ஆகாஷ் பெயரைதான் ஜோவிகா இனிஷியலாக போடுகிறார்” என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமாரின் விளக்கம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.