bigg boss tamil voice : டிவி நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணம், எடிட்டர்கள் தான். 2 மணி நேரம் நடந்த நிகழ்ச்சி பற்றி 2 நிமிடங்களில் அதுவும் சுவாரசியத்தை ஊட்டும் வகையில் சொல்லி கலர்ஃபுல்லாக கொடுப்பது என்றால் சும்மாவா? அதிலும் விஜய் டிவி ப்ரமோக்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அதை பார்த்து விட்டால் போது ஃபுல் நிகழ்ச்சியையும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றிவிடும்.
Advertisment
இந்த ப்ரமோக்களின் பின்னால் ஒலிக்கும் குரலும் இதற்கு மிக முக்கிய காரணம். விஜய் டிவியின் குரல் என்றால் அனைவருக்கும் தெரியும் அது கோபியின் குரல்தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மகாபாரதம் தொடரில் இவரின் குரலுக்கே தனி ஃபேன்ஸ்.
கோயம்பத்தூரை சேர்ந்த இவர் 2000 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்தார். முதலில் இயக்குனராக வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, இவரது குரல் வளத்தை கண்டு டப்பிங் ஆர்டிஸ்டாக வாய்ப்பு கிடைத்தது. அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் தான் இப்போது அவர் இருக்கும் இடம்.
Advertisment
Advertisements
பிக் பாஸ் வீட்டில் என்ன தான் சண்டை, கூச்சல் என அடித்துக்கொண்டாலும், ஒரே ஒரு குரல் அந்த குரல் அனைவரையும் அடக்கிவிடும், போட்டியாளரின் பெயரை சொன்னாலே போதும் அடுத்த நிமிடம் தங்கள் வேலையை பார்க்கப் போய் விடுவார்கள். இந்த குரலுக்கு போட்டியாளர்கள் முதல் கமலஹாசன் வரை அடங்கித் தான் போவார்கள்.
இந்த குரல் யாருடையது என்பதில் பலருக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. கோபியைதான் இவரைத்தான் பிக் பாஸ் , அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒலிக்கும் குரல் என்று பலரும் நினைத்து இருந்தார்கள்.
ஆனால், அது உண்மை இல்லை. அந்த குரலின் உரிமையாளர் யார் என்றே தெரியவில்லை என்று அவர் இரண்டாவது சீசனிலே சொல்லி விட்டார். இருந்தாலும் அந்த கேள்விக்கான பதில் மட்டும் இன்று வரை கிடைக்கவில்லை.