தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என்று கூறி அபிராமி, மதுமிதா இடையே மோதல் ஏற்படுவது போன்ற இன்றைய ( ஜூன் 30) ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 3 சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கிவருகிறார். என்ன, இந்த சீசனில் கமலின் பேச்சில் கொஞ்சம் அரசியல் நெடி அதிகமாகவே வீசுகிறது.
முதல் இரண்டு சீசன்களில் சிலப்பல தினங்களுக்கு பிறகு தான் சண்டை என்ற கட்டம் வரும். இந்த சீசனில் ஏனோ, 3வது சீசன் துவங்கிய 3வது நாளிலேயே சென்டிமென்ட், சண்டை என ஆட்டம் களைகட்ட துவங்கியுள்ளது.
தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என்று கூறி அபிராமி, மதுமிதா இடையே மோதல் ஏற்படுவது போன்ற இன்றைய ( ஜூன் 30) ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3 வீட்டில் உள்ளவர்களுக்கு தினமும் என்னை அழ வைப்பதே வேலையாகிவிட்டது என்று மீரா மிதுன் தெரிவித்தார்.
போட்டியாளர்களில் குறைந்தது ஒருவரையாவது தினமும் அழ வைத்துப் பார்க்கவில்லை என்றால் பிக் பாஸுக்கு நேரம் போகாது போன்று. இன்று பிக் பாஸ் வீட்டில் அபிராமி அழுவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அபிராமி நான் ஒரு தமிழ் பொண்ணு என்று மதுமிதா கூறுவதுடன் ப்ரொமோ துவங்குகிறது.
இதில் தமிழ், தமிழ் பொண்ணு வருவதற்கு எங்கே சார் இடம் இருக்கு என்று கமல் ஹாஸனிடம் கூறி அழுகிறார் அபிராமி. விளையாட்டுக்கு செய்வதற்கும், நம் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கும் தொடர்பே இல்லை. உங்களுக்கு மட்டும் தானா என்று ஷெரின் சீறுகிறார். நான் உன் கேரக்டரை எதுவுமே சொல்லவில்லை என்று மதுமிதா கூற அபிராமியோ ஷட் அப் என்று மிரட்டுகிறார்.
பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் இந்த தமிழ் பொண்ணு பிரச்சனையை ஊதி பெரிதாக்குவதை வழக்கமாக வைத்துவிட்டார் பிக் பாஸ். கடந்த சீசனிலும் தமிழ் பொண்ணுங்க ஒன்றாக சேர்ந்து பேசினார்கள். என்னடா இன்னும் தமிழ் பொண்ணு, மண்ணு, கலாச்சாரம்னு பிரச்சனை கிளம்பவில்லையே என்று பார்த்த நேரத்தில் இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் பிற மொழி பேசும் போட்டியாளர்களை அழைத்து வந்து விட்டு தமிழ் பொண்ணு பிரச்சனையை கிளப்புவது நன்றாக இல்லை பிக் பாஸ்.
அது என்ன நான் தமிழ், நான் தெலுங்கு, நான் இந்தி, நான் கன்னடம் என்று கூறி சண்டை போடுவது. திரையுலகில் மொழி, மதம், இனத்திற்கு எல்லாம் இடம் இல்லை. இதை கூட புரிந்து கொள்ளாமல் இப்படி சின்னப்புள்ளத்தனமாக சண்டை போடுகிறார்களே.