”நான் டைட்டில தான் ஜெயிக்கல ஆனா….” பிக் பாஸ் தர்ஷனின் உருக்கமான வீடியோ

Tharshan’s Message: வின் பண்ணுனா டைட்டில் மட்டும் தான் கிடைக்கும். ஆனா எனக்கு இவ்ளோ பெரிய ஃபேமிலியே கிடைச்சிருக்கு.

Bigg Boss Tharshan
Bigg Boss Tharshan

Bigg Boss Tharshan: பிக் பாஸ் 3′ நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளரும், டைட்டிலை வின் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான தர்ஷன் ஆச்சர்யப்படும் விதமாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

தர்ஷனின் வெளியேற்றம் பார்வையாளர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்காவிட்டாலும், மக்களின் மனதை வென்றவர் தர்ஷன் தான் என பலரும் கூறினர். இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தர்ஷன், தனது முதல் வீடியோ செய்தியை வெளியிட்டு, அதில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அதில், “முதலில் எல்லாருக்கும் சாரி. ஏன்னா நா இந்த வீடியோவ வெளில வந்ததுமே பண்ணனும்ன்னு நினச்சேன். இந்த வீடியோ உங்களுக்கு தான். உங்கள ஃபேன்னு சொல்றதா, ஃபிரெண்ட்ஸ்ன்னு சொல்றதான்னு தெரில. ஃபேமிலிங்கற வார்த்தை தான் உங்களோட அன்புக்கும், ஆதரவுக்கும் சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன். இது கனவையும் தாண்டி நடந்த ஒரு விஷயம். ஸோ நன்றிங்கற ஒரு வார்த்தைல இதை அடக்க முடியாது. சில விஷயம் நம்மளே சொன்னா, தற்பெருமையா இருக்கும். ஆனா எனக்கு இவ்ளோ அன்பும், ஆதரவும் கெடச்சத நான் கர்வத்தோடயே சொல்வேன்.

எல்லாரும் கேக்குறாங்க, டைட்டில் வின் பண்ண முடியலையேன்னு ஃபீல் பண்றீங்களான்னு. நிச்சயமா இல்லை. வின் பண்ணுனா டைட்டில் மட்டும் தான் கிடைக்கும். ஆனா எனக்கு இவ்ளோ பெரிய ஃபேமிலியே கிடைச்சிருக்கு. அங்கயே நான் ஜெயிச்சிட்டேன். 16 போட்டியாளர்கள்ல எனக்குக் கிடைச்ச அன்பும் ஆதரவும் அளவுக் கடந்தது. இதெல்லாத்துக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரில. அப்புறம் உள்ள இருக்க 4 பேருக்கும் ஓட்டு போடுங்க. இவங்களுக்குத் தான் போடுங்கன்னு நான் இன்ஃப்ளூயன்ஸ் பண்ண மாட்டேன். யாரு தகுதியானவங்கன்னு பாத்து போடுங்க. லவ் யூ ஆல்…” என்று தெரிவித்திருக்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tharshan video message after eviction

Next Story
ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய பிக் பாஸின் 100-வது நாள்!Bigg Boss Tamil 3 day 100, 01.10.19,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com