scorecardresearch

ஆரவ்- ராஹீ திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

aarav raahei wedding : இருவருமே பல வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஆரவ்- ராஹீ திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

aarav raahei wedding :  ஆரவ் – ராஹி திருமணம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.ஆரவ்விற்கும், ‘ஜோஷ்வா’ படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் செப்டம்பர் 6-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. இருவருமே பல வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

விளம்பர மாடலாக  இருந்த ஆரவ், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’, விஜய் ஆண்டனியுடன் ‘சைத்தான்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு, சரண் இயக்கத்தில் ‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜ பீமா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

சென்னையில் எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கல்யாண் மாஸ்டர். காயத்ரி ரகுராம், வையாபுரி, கணேஷ் & ஆர்த்தி, டைரக்டர் சரண், நடிகைகள் சுஜா வாருணி, சங்கீதா, பிந்து மாதவி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா தெரிவித்தார். ஆனால், ஆரவ் அப்போது  முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்ததும், ஆரவும் ஓவியாவும் நண்பர்களாக தங்களை அடையாள படுத்திக்கொண்டனர். காதல்,கல்யாணம் இந்த இரண்டிலும்,யாரும்,யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று ரசிகர்கள் ஆரவ்வின் ரசிகர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss title winner aarav ties the knot with actress raahei