bigg boss today : பிக் பாஸ் வீடு 86 ஆவது நாளில் பல்வேறு மாற்றங்களை பார்க்க தயாராகிவிட்டது. இதுவரை இருந்த போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிப்பட தொடங்கி விட்டன.
Advertisment
bigg boss today promo 1 : பிக் பாஸ் வீட்டில் இப்போது தான் டாஸ்க் டைம் வந்துள்ளது. வனிதாவின் வெளியேற்றத்திற்கு பிறகு போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டனர். இதுவரை காதல், சண்டை, டீம் என சுற்றித்திரிந்தவர்கள் கூட டாஸ்கில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர் நேற்றைய தினம் ஃபனல் டிக்கெட் செல்ல யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என நடத்தப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்களின் உண்மை முகங்கள், அவர்கள் மற்ற போட்டியாளர்களை பார்க்கும் விதங்கள் வெளிப்பட தொடங்கியது.
அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமில் சேரன் தான் வெற்றி பெற இருக்கும் காரணங்கள் என்ன என்பதை விளக்குகிறார். அப்போது லாஸ்லியா மற்றும் கவினின் முகம் மாறுவது ப்ரோமில் நன்கு பார்க்க முடிகிறது.
Advertisment
Advertisements
bigg boss today promo 2 : இரண்டாவது ப்ரமோவில் தர்ஷனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு தர்ஷன் சொல்லும் பதில்கள் தான் ஹைலைட்டிற்கு காரணம். சுயசிந்தனை இல்லாதவர்கள், அனுதாப ஓட்டு கேட்பவர்கள் என இரண்டு கேள்விகளுக்கு யோசிக்காமல் உடனே பதில் சொல்லி அசத்துகிறார் தர்ஷன். இந்த தர்ஷன் ஜெயிக்க வேண்டும் என்று தான் விட்டு கொடுப்பதாக ஒருவித மாய பிம்பத்தை ஏற்படுத்துக் கொண்டிருக்கிறார் கவின்.
இப்போது புரிகிறதா கவின்? உங்கள் கேம்மை நீங்கள் விளையாட தொடங்கி விட்டீர்கள் ஆனாலும் உங்கள் மீது மற்ற ஹவுஸ் மேட் வைத்திருக்கும் பார்வை கடுகு அளவும் மாறவில்லை.
bigg boss today promo 3 :
மூன்றாவது ப்ரமோவில் பயங்கரமான டாஸ்கில் தந்து முழு ஃபவட்டையும் போடுகிறார் கவின். தர்ஷன்,சாண்டி, சேரன் அவுட் ஆக கடைசி நிலையிலும் விடாமல் நிற்கிறார் கவின். அவருடன் ஷெரீன் மற்றும் லாஸ்லியா, முகெனும் கடும் போட்டியை தருகிறார்கள். இறுதியில் வெற்றி பெறுவது யார் என்பது இன்று இரவு முழு எபிசோடில் தெரிந்து விடும்.