Bigg boss today promo : பிக் பாஸ் இல்லத்தில் 60 ஆம் நாளுக்கான 3 ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. இந்த ப்ரமோக்கள் கவின் - லாஸ்லியா காதல் பற்றி தான் அதிகம் பேசுகிறது.
60 நாட்களை கடந்த பிக் பாஸ் இல்லத்தில் மீண்டும் காதல் பூ பூத்துள்ளது. திரும்பவும் முதல்ல இருந்தா? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம் . இது பழைய கதைதான். ஆனால் இப்போது தான் வெளிசத்திற்கு வருகிறது. ப்ரமோக்களை பார்த்த ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ். ”இவங்க காதல் கூட ஓகே டா ப்ளிஸ். அந்த ப்ளேபேக் சாங்க்ஸ் மட்டும் வேண்டாம் டா” என்பது தான்.
Bigg Boss promo1 : முதல் ப்ரமோவில் லாஸ்லியா மற்றும் சேரன் இருவரும் கவின் புகழ் பாடுகின்றனர். இதுவரை கவினை விமர்சித்து வந்த சேரன் நீ நல்லவன்னய்யா என்ற வார்த்தையை சொல்லி விட்டார். இந்த வார்த்தைக்காக தானா புள்ள் இம்புட்டு பாடு பட்டுது. அடுத்து லாஸ்லியா, கவினை பிடிக்கும் என்ற இடத்தில் இருந்து ரொம்ப பிடிக்கும் என்ற இடத்திற்கு ப்ரமோஷன் கொடுத்துள்ளார்.கவின் வழிய, லாஸ்லியா சிரிக்க போதும் சாமி என்பது போல் ஆகிவிட்டது.
Bigg Boss promo2 :
அடுத்த ப்ரமோவாது ஆறுதல் தரும் என்று பார்த்தால் அதிலும் லாஸ்லியா சேரப்பா இருவரும் கவின் பற்றி தான் கதைக்கிறார்கள். எனக்காக, அவன், அவனுக்காக நான் என் லாஸ்லியா சொல்லும் பஞ்ச் வசனங்கள் அவரின் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்திருக்கிறது. இதுவரை இருந்த வந்த நட்பு வெற லெவலுக்கு சென்று விட்டதாகவும், வெளியே சென்ற பின்பு அதை பற்றி நாங்கள் முடிவு எடுப்போம் என்கிறார் லாஸ்லியா. சேரப்பா மைண்ட் வாய்ஸ் என்னனு யாருக்குமே கணிக்க முடியவில்லை.
Bigg Boss promo3 :
மூன்றாவது ப்ரமோவில் கவினும், லாஸ்லியாவும் பெர்சனலாக ஏதோ பேசுகிறார்கள். அதற்குள் மின்னலே சாங்க்ஸ் போடுகிறார் பிக் பாஸ். லாஸ்லியா வெட்க பட்டு கண்களை மூடிக் கொள்கிறார். மொத்தத்தில் அங்கு சுற்றி இங்கு சுற்றி மீண்டும் காதல் கதைக்கு இடம் பெயர்கிறது இந்த வாரம் பிக் பாஸ்.
கவின் - சாக்ஷி- லாஸ்லியா காதல் கதை என்பது பிக் பாஸ் வீட்டில் அதிகம் பேசப்பட்ட ஒன்று. இதில் மூன்று பேரிடமும் இது வெறும் விளையாட்டு தான் என முற்றுப்புள்ளி வைத்த கவின் தற்போது லாஸ்லியாவிடம் மட்டும் கொஞ்சம் வேற மாறி பேசுக் கொண்டிருக்கிறார். இதை முதலிலேயே கணித்தவர் லாஸ்லியா- கவின் விளையாட்டுக்கு பலியான சாக்ஷி.