Advertisment

எப்போ ஞாயிற்றுக்கிழமை வரும்? எங்க சிம்புவ ரசிக்கனும்-ரசிகர்கள் நெகிழ்ச்சி

எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் சிலம்பரசன். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையும் அவர் சிறப்பாக செய்வார்.

author-image
WebDesk
New Update
எப்போ ஞாயிற்றுக்கிழமை வரும்? எங்க சிம்புவ ரசிக்கனும்-ரசிகர்கள் நெகிழ்ச்சி

பிக்பாஸை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

Advertisment

விக்ரம் பட வேலைகள் முடியாததால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம்  என கூறப்பட்டது.

ஆனால் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருப்பதால் ரம்யா கிருஷணனால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியாது என்பது பலரின் கருத்தாக இருந்தது. இதனால் நடிகர் சிம்புவிடம் பேசி வந்தனர்.



இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவதாக உறுதியாகி உள்ளது.

இதற்கான புரோமோ வெளியாகி உள்ளது. அதில் செம ஸ்டைலாக வரும் சிம்பு, ‛‛எதிர்பார்க்கலேல... நானும் எதிர்பார்க்கல... பாக்கலாமா.... '' என புன்னகை செய்கிறார்.

இந்த வீடியோவை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

வெள்ளித்திரையில் எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் சிலம்பரசன். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையும் அவர் சிறப்பாக செய்வார் என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.

எப்போ ஞாயிற்றுக்கிழமை வரும்? எங்க சிம்புவ ரசிக்கனும் என்று ரசிகர் ஒருவர் ஆர்வத்துடன் கமென்ட் செய்துள்ளார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருவதைப் போன்று கமென்ட் செய்துள்ளார்.

டிரெண்டிங்கில் மம்முட்டி பட டீசர்.. ஜான்வி கபூரின் உருக்கமான பதிவு.. மேலும் செய்திகள்

இதுவரைக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை.

ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் சீக்கிரம் வா ஹீரோ. உள்ளே இருப்பவர்களுக்கு இது மிக பெரிய அதிர்ச்சி என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன் கடைசியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கிருஷ்ணன் இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

யாருமே எதிர்பாராத வண்ணம் அவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வருகிறார்.

உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு கூட அவர் வரப்போவது தெரியாது.

இதனால் அவர்களுடன் சேர்ந்து ரசிகர்களும் சிம்புவை ரசிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 முடிந்த சில நாட்களிலேயே பிக்பாஸின் OTT வெர்ஷன் 24 மணி நேரமும் நேரலை என்ற அடிப்படையில் டெலிகாஸ்ட் ஆக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment