Advertisment

தம்பினு சொல்லிட்டு தப்பா பேசலாமா? அனிதாவை நோக்கி நீளும் கேள்வி

Producer Ravindhar Chandrasekaran on anitha sampath Bigg Boss Ultimate Tamil News: பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனிதா குறித்து பிரபல தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Bigg Boss Ultimate tamil: fatman ravi about anitha sampath


Advertisment
publive-image

Anitha Sampath Tamil News: சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இருப்பினும், செய்தி வாசிப்பாளராக இவருக்கு கிடைத்த வரவேற்பு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் அதிகம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தனக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார். மேலும் வலைதள பக்கங்களில் அவரை கிரஸ் ரேஞ்சில் கொண்டாடிய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை தூக்கி வீசி விட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தோன்றாத அனிதா சம்பத் தற்போது சில படங்களில் சிறிய ரோலில் நடித்து வருகிறார்.

publive-image

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்த நிலையில், ராஜு வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து, பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக "பிக்பாஸ் அல்டிமேட்" என்ற புதுமையான மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் 24/7 ஆக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத்தும் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனிதா குறித்து பிரபல தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மற்றும் இணைய வாசிகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

நிரூப், அனிதா இரண்டு பேரும் விமர்சகர் ரவீந்தர் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா பாலாஜி பற்றி பேசுகிறார். இதைப் பகிர்ந்துள்ள ரவீந்தர், அனிதா நீ ஒரு தந்திரமான நரி. நீ எப்போதுமே வாழ்க்கை முழுவதும் பேக்கேஜ் சுமந்து கொண்டு போற. குழந்த இந்த முறை உன் பருப்பு வேகாது. பாலாஜி தம்பி நல்லா தெளிவா விளையாடிக் கொண்டிருக்கிறார். சொல்லித்தான் ஆடணும் அவசியம் அவனுக்கு இல்லை. நீ திருந்தவே மாட்ட சகுந்தலாதேவி" என்று பதிவிட்டுள்ளார்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Bigg Boss Tamil Vijay Tv Balaji Murugadoss Bigboss Anitha Sambath Anitha Sampath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment