scorecardresearch

பாலா – அபிராமிக்கு இடையில் நடப்பது என்ன? சர்ச்சை கிளப்பும் வனிதா

Bigg Boss fame vanitha vijayakumar shares about Balaji – abhirami relationship in social media Tamil News: பாலாஜி- அபிராமி குறித்த கிசுகிசுக்கள் தற்போது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், வனிதா விஜயகுமார் அது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Ultimate Tamil News: vanitha on Balaji - abhirami relationship

Bigg Boss Ultimate Tamil News: ‘பிக்பாஸ் அல்டிமேட்’ 24 மணிநேரமும் (24/7) ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். விஜய் டிவி மற்றும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சிக்கு ‘பிக்பாஸ்’ போல் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்தார் தற்போது, படப்பிடிப்பு மற்றும் சில காரணங்களால் அவர் விலகியுள்ளார். இதனால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேற்றம்; காரணம் அடுக்கும் வனிதா

பிக்பாஸின் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்ற 14 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள இந்த ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பல அல்டிமேட்டான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த வாரத்தில் தொகுப்பாளர் கமல் விலகிய நிலையில், அடுத்த வாரமே வனிதா விஜயகுமார் விலகி அதிர்ச்சி கொடுத்தார்.

பிறகு ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே கமல்ஹாசன்தான் அப்படி இருக்கும் போது, அவரால் நேரம் ஒதுக்க முடியாதா? மிஞ்சினால் அதிகப்பட்சம் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே அவருக்கு ஷூட்டிங் இருக்கும். அதற்குள் ஏன் விலக வேண்டும்? திடீரென நான் இந்த நிகழ்ச்சியில் இல்லை, நான் பிக்பாஸ் 6ல் வருகிறேன் என்று கூறி கிளம்பிவிட்டார். அவருக்கே இந்த நிகழ்ச்சி தவறாக செல்கிறது என்று தெரிகிறது. அதனால் தான் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார்.

நாங்ளே பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இந்த நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்கிறார்கள் என்றுதான் பேசி கொண்டோம். நான் ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் தான் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் சரியில்லை.

நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எல்லோரும் நான் வெளியே வந்ததை சரி என்று தான் சொல்கிறார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேம் தப்பான டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறது. என்னை யாரும் ஏன் இப்படி செய்தாய் என்று சொல்லவில்லை. நீ செய்தது சரி தான் என்று என்னை பாராட்டினார்கள். என்னுடைய நண்பர்கள், என்னுடன் நெருக்கமாக உள்ளவர்கள் என எல்லோருமே அதை தான் சொன்னார்கள்.

பொதுவாகவே எனக்கு சண்டை போடுவது பிடிக்காது. அதனால் தான் நான் பிரச்சனைகள் அதிகமாகும் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவேன்” என்று கூறி இருந்தார்.

அல்ட்டிமேட் வீட்டில் அல்ட்டிமேட்டான சர்ச்சை

வனிதா விஜயகுமார் பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பின் நிகழ்ச்சி சுவரஷ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், பாலாஜி- அபிராமி குறித்த கிசுகிசுக்கள் தற்போது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அபிராமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கிய நிரூப்பை காதலித்திருந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரேக்கப் ஆகி விட்டார்கள். தற்போது அல்டிமேட் வீட்டில் போட்டியாளரராக வந்துள்ள அவருக்கு, பாலாஜியிடம் அபிராமி காட்டும் நெருக்கம் சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால், பாலாஜியை கண்டாலே நிரூப்க்கு கண்ணில் ஃபயர் வருகிறது.

இப்படியொரு நிலையில் தான், பாலாஜி – அபிராமி ஜோடி ஸ்மோக்கிங் ரூமில் படு நெருக்கம் காட்டியுள்ளனர். ஆனால், இது ஒளிபரப்பப்படாமல் கட் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

சர்ச்சைக்கு வனிதா கொடுத்த பதில்

இது குறித்து ரசிகர்கள் அப்போது வனிதாவிடம் கேட்டபோது, உங்களை ஏமாற்றமடைய செய்வதர்க்கு மன்னியுங்கள். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது உண்மையான காதல் இல்லை என்று பதில் அளித்தார். முன்னதாக, பாலாஜி – அபிராமி இடையில் எதோ சென்று கொண்டு இருக்கிறது என்றும் அபிராமியை பாலாஜி பயன்படுத்தி கொள்கிறார் என்றும் சர்ச்சையை கிளப்பியதே வனிதா தான்.

வனிதாவின் இந்த திடீர் யூ-டர்ன் பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. அவரின் இந்த பதில் குறித்து கேள்வியெழுப்பி ரசிகர் ஒருவர், அது உண்மை காதல் இல்லை என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டுள்ளார். அதற்கு வனிதா, “நாய் மற்றும் இதயம் சிம்பலை பதிவிட்டு, ‘வேறு என்ன சொல்வது’ என்று கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், வனிதா அதை பப்பி லவ் என்றும், நாய்க் காதல் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss ultimate tamil news vanitha on balaji abhirami relationship

Best of Express