சரியில்லை என்று அவருக்கே தெரிந்துவிட்டது… கமல் குறித்து சர்ச்சை கிளப்பும் வனிதா
Bigg Boss fame vanitha vijayakumar talks about why she and kamalhasan quit from biggboss ultimate Tamil News: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தானும் தொகுப்பாளர் கமலஹாசனும் வெளியேறியதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Bigg Boss fame vanitha vijayakumar talks about why she and kamalhasan quit from biggboss ultimate Tamil News: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தானும் தொகுப்பாளர் கமலஹாசனும் வெளியேறியதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Bigg Boss Ultimate Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான 5வது சீசன் சமீபத்தில் முடிவந்தடைந்த நிலையில், அதில் ராஜு வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற புதுமையான மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisment
24 மணிநேரமும் (24/7) ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், பிக்பாஸின் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்ற 14 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில், அவர் தற்போது திடீரென விலகி இருக்கிறார். இதனால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
Advertisment
Advertisements
பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இதிலும் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் மக்களின் ஓட்டு அடிப்படையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். கமல்ஹசன் விலகிய அடுத்த வாரத்திலேயே நடிகை வனிதா விலகியது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகை வனிதா, தானும் தொகுப்பாளர் கமல்ஹாசனும் திடீரென விலகிய காரணம் குறித்து பேசியுள்ளார்.
வனிதா விஜயகுமார் அளித்துள்ள அந்த பேட்டியில் "விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே கமல்ஹாசன்தான் அப்படி இருக்கும் போது, அவரால் நேரம் ஒதுக்க முடியாதா? மிஞ்சினால் அதிகப்பட்சம் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே அவருக்கு ஷூட்டிங் இருக்கும். அதற்குள் ஏன் விலக வேண்டும்? திடீரென நான் இந்த நிகழ்ச்சியில் இல்லை, நான் பிக்பாஸ் 6ல் வருகிறேன் என்று கூறி கிளம்பிவிட்டார். அவருக்கே இந்த நிகழ்ச்சி தவறாக செல்கிறது என்று தெரிகிறது. அதனால் தான் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார்." என்று கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார்
மேலும், "நாங்ளே பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இந்த நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்கிறார்கள் என்றுதான் பேசி கொண்டோம். நான் ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் தான் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் சரியில்லை" என்றும் வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“