/tamil-ie/media/media_files/uploads/2019/07/Bigg-Boss-Vanitha.jpg)
Bigg Boss Tamil vanitha, tharshan- sanam shetty issues
பிக்பாஸ் தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக நடிகை சனம் ஷெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், சனம் ஷெட்டி – தர்ஷன் விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் மற்றொரு பிரபலம் வனிதாவிஜயகுமார் தனது இன்ஸ்டகிராம் அக்கவுண்டில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வனிதாவும், கமல் ஹாசனும் உரையாடுவது போல் அமைந்திருகிறது அந்த வீடியோ. அந்த வீடியோவில், வனிதா, " தர்ஷன் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தனது அன்பை பகிர்ந்து கொண்டுவிட்டார். இவள்(ஷெரினை ) தர்ஷனிடம் அன்பைத் தேடுவது முறையல்ல என்று கமலிடம் விவாதம் செய்கிறார்.
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் பேட்டி; சனம் ஷெட்டியை விட்டு விலகக் காரணம் என்ன?
அந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. பதிவிட்ட இரண்டு நாட்களில் 50,000க்கும் அதிகமான மக்கள் அதை பார்வையிட்டிருக்கின்றனர்.
சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இந்த நேரத்தில், வனிதா குறிப்பாக தர்ஷன்- ஷெரின் தொடர்பான விவாதத்தை மட்டும் எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
,
View this post on Instagram#sanamshetty #tharsan #kamalhaasan #BiggBossTamil3..
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.