மீண்டும் காதலா? வனிதா குறிப்பிட்ட அந்த ரகசியம் இதுதான்

bigg boss vanitha Riyaz Khan Youtube Show : சில நாட்களுக்கு முன்பு, வனிதா  விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மீண்டும் காதலிக்கிறேன்” என பதிவிட்டார்

vanitha vijayakumar age vanitha peter paul
vanitha vijayakumar age vanitha peter paul

சில நாட்களுக்கு முன்பு, வனிதா  விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மீண்டும் காதலிக்கிறேன்” என பதிவிட்டார். ஆனால் யாரை காதலிக்கிறார், எதற்காக அப்படி ஒரு  பதிவு என்பதை ரகசியமாகவே வைத்திருந்தார். மேலும், தனது பதிவை உமா ரியாஸ் கணக்கோடு ஹஷ்டேக் செய்திருந்தார்

வனிதாவின் இந்த பதிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் , பரபரப்பையும் உருவாக்கியது.

வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை உமா ரியாஸ் நடத்தும் யூடுயூப் சேனலில் நடிகை வனிதா கலந்து கொண்டார். உமா ரியாஸின், சவாலை ஏற்றுக் கொண்டதன் காரணமாக  தான் இவ்வாறு பதிவிட்டதாக வனிதா தெரிவித்தார்.

 

வனிதா விஜயகுமார் முதன்முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டு ஆனந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளைப் பெற்றெடுத்தார்.

 

 

 

 

 

பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss vanitha vanitha vijaykumar in another relationship uma riyaz khan youtube show

Next Story
ரஜினி படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா: அண்ணாத்தே ஷூட்டிங் நிறுத்தம்Rajini Kanth Starer Annathe stopped due to corona
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com