Vanitha Vijayakumar: தமிழின் மூத்த நடிகர்கள் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். முதல் படத்திலேயே நடிகர் விஜய்யுடன் அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தவர், திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இதனிடையே குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதல், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மக்களிடையே பரிச்சயமானார். இதற்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் பிரபலமானார். தற்போது கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என, தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா.
Advertisment
Advertisements
அதாவது கஷாயம் செய்துக் கொடுத்து கொரோனாவை விரட்டியடித்ததை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த பலர், கைதேர்ந்த கலைஞர்களைப் போல இதனை செய்து இருக்கிறீர்கள் என்று வனிதாவை பாராட்டி வருகிறார்கள். அதேசமயம் கசாயம் குடித்தால் கொரோனா வராதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எது எப்படியோ வைரஸ் பாதிப்பு வராமல் இருக்க கசாயம் குடியுங்கள். வந்துவிட்டால் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விடுங்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.