நடிகை வனிதா தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது வித்தியாசமான செயல்பாடுகள் மற்றும் பேச்சுகளால் அடிக்கடி லைம்லைட்டிற்கு வருபவர் நடிகை வனிதா. விஜய்யுடன் சந்திரலேகா, காக்கை சிறகினிலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வனிதா, பின்னர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் மீண்டும் திரை வெளிச்சத்திற்கு வந்தார் வனிதா. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.
விஜய் டிவி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் கலந்து கொண்டவர்களைக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. இதில் சுரேஷூடன் ஜோடி சேர்ந்து போட்டியாளராக கலந்துக் கொண்ட வனிதா, நிகழ்ச்சியின் நடுவர்களுடனான மனவருத்ததிற்கு பின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
தற்போது பிக்கப் ட்ராப், வாசுவின் கர்ப்பிணிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் வனிதா. பிக்கப் ட்ராப் பட ப்ரோமோஷனுக்காக வனிதா பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக நின்று சமூக வலைதளங்களில் வைரலானார். ஏனென்றால், சில மாதங்களுக்கு முன் தான் மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பாலை பிரிந்திருந்தார். மேலும் வனிதா நான்காவது திருமணம் செய்யப்போவதாக அப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் பவர் ஸ்டாருடனான திருமண புகைப்படம் பட ப்ரோமோஷனுக்காக என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில், வனிதா தனது மகள் ஜோவிகாவின் 16 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவரது மகளுக்கு லிப் கிஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, என் ஜோவிகா, எனது மிகவும் மதிப்புள்ள உடைமை, என் பொக்கிஷம், கடவுள் அனுப்பிய தேவதை, என்னுடைய எல்லாமும் ஆனவள், இன்று 16 வயதாகிறாள், இதனை பிக்கப் பட செட்டில் எனது நண்பர்கள் மற்றும் படக்குழுவினர்களுடன் கொண்டாடுகிறேன், என்று பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. ரசிகர்கள் இதற்கு கலவையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil