Advertisment
Presenting Partner
Desktop GIF

'எம்.ஜி.ஆர் மட்டும் உதவி செய்திருக்காவிட்டால்...' பிக் பாஸ் ஐசரி வருண் ரியல் ஸ்டோரி

Bigg Boss Varun Share his real story: தாத்தா நாடகம் போட்டாதான் ஒருவேளை சாப்பாடு; பிக் பாஸ் வருண் பகிர்ந்த நெகிழ்ச்சி கதை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'எம்.ஜி.ஆர் மட்டும் உதவி செய்திருக்காவிட்டால்...' பிக் பாஸ் ஐசரி வருண் ரியல் ஸ்டோரி

எங்க தாத்தா நாடகம் போட்டதான் ஒருவேளை சாப்பாடு, எம்.ஜி.ஆர் நிறைய உதவி செய்திருக்கார், நல்ல நடிகனாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருண் கூறியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த சில நாட்களாக லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கான கதை சொல்லட்டுமா டாஸ்க் நடந்து வருகிறது.

நேற்றைய எபிசோடிலும் கதை சொல்லட்டுமா டாஸ்க் தொடர்ந்தது. இந்த டாஸ்க்கில் பேசிய வருண் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார். வருண் பழம்பெரும் நடிகரான ஐசரி வேலனின் பேரன். வருண் தனது தாத்தா பற்றியும் அப்போது பெருமையாக பேசினார்.

வருண் பேசியபோது, எங்க தாத்தா ஐசரி வேலன். அவர் ஒரு மேடை நாடகக் கலைஞர். எம்.ஜி.ஆர்-க்காக நிறைய பிரச்சாரம் செய்தார். நிறைய அரசியல் கூட்டங்களுக்காக நாடகம் போட்டுள்ளார். அவர் நாடகத்தில் நடித்து விட்டு சம்பாதித்து கொடுக்கும் காசில்தான் எங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு. எங்க தாத்தா சில படங்களிலும் நடித்துள்ளார்.

எங்க தாத்தா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இறந்துவிட்டார். அப்போது பத்திரிக்கைகளில் மேடை நாடகத்தில் அடுத்த சீனுக்காக காத்திருந்தவரின் சீன் முடிந்தது என்றெல்லாம் எழுதினார்கள். 7 லட்சம் கடன் ஆனது. அப்போது தாத்தா எம்.ஜி.ஆர் கூட இருந்ததால் எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள். எம்.ஜி.ஆர் உதவி செய்தார்.

எம்ஜிஆர் கூட இருந்ததாலேயா என்னன்னு தெரியல அவரோட ஜீன் மாதிரி எங்க மாமா ஐசரி கணேஷ் ஒன் மேன் ஆர்மியாக உழைச்சு முன்னுக்கு வந்தார். என்னை பார்க்குறவங்க எல்லாம் நான் தங்க ஸ்பூனோட பிறந்தவன். எனக்கு என்ன கவலைன்னு கேட்பாங்க. ஆனா நான் கேட்டதை எதுவும் எங்க வீட்டுல வாங்கி கொடுத்ததில்லை. ஒரு ரூபாய் என்றாலும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது என செலவு செய்ய மாட்டார்கள்.

எனக்கு நான் தானாக வளர வேண்டும். சினிமாவில் நல்லா வரவேண்டும் என்று 10 ஆம் வகுப்பிலேயே ஆசை வந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். கடைசி வரைக்கும் கத்துக்கிட்டே இருப்பேன். தலைவா படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன். கிடைக்கும் கதாப்பாத்திரங்களில் நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. என் கேரக்டர் என்னணு காட்டதான் வந்தேன். எனக்கு இந்த லைக், டிஸ்லைக், ஹார்ட்டெல்லாம் விஷயமே இல்லை, என்று வருண் பேசினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment