/tamil-ie/media/media_files/uploads/2020/07/New-Project-2020-07-09T200453.029.jpg)
bigg boss mugen, bigg boss season 3, mugen rao lover yasmin nadiah, பிக்பாஸ், முகேன், வைரல் வீடியோ, நதியா, யாஸ்மின் நதியா, nadiah, cyber bullying viral video, mugen nadiah, viral news, tamil viral video news, tamil entertainment video news
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றியாளரான முகேன் ராவ் காதலி நதியா சைபர் புல்லிங் பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நான் யாரை எல்லாம் நம்பினேனோ அவர்கள் எல்லாரும் என்னை இழிவாக பேசியவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டார். எனக்கு ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஆண்டு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முகேன், தர்ஷன், கவின், சாண்டி, அபிராமி, ஷெரின், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது, அபிராமி முகேன் மீது காதல் வெளிப்பட பேசினார். ஆனால், முகேன் தனக்கு அபிராமி தோழி மட்டும்தான் என்று உறுதியாகக் கூறினார். ஒரு கட்டத்தில் தான் நதியா என்ற பெண்ணை காதலிப்பதாகக் கூறினார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகேன், கவின், தர்ஷன், சாண்டி கடுமையான போட்டியாளர்களாக இருந்தனர். இதில், முகேன், சாண்டி இருவரும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.
முகேன் இறுதிப் போட்டிகுள் நுழைந்ததும் முகேனின் காதலில் நதியா அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டார். அதையடுத்து அவருடைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலானது. அண்மையில், முகேன் நதியாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த நிலையில், முகேன் காதலி நதியா, சைபர் புல்லிங் பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு நடிகை நான் இந்த துறையில் நுழையும்போது எனது நிறம் குறித்தும் என்னுடைய உருவம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை நான் சந்தித்திருக்கிறேன் இப்படி கொஞ்சம் விமர்சனங்களை இருந்த விமர்சனங்கள் கடந்த ஆண்டு மட்டும் அதிகமாக இருந்தது. அது மாதிரி சமயத்தில் நமக்காக நமது நண்பர்கள் இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் யாரை எல்லாம் நம்பினேனோ அவர்கள் எல்லாம் என்னை இழிவாக பேசியவர்கள் பக்கம் சாய்ந்து விட்டார்கள். அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.
முகேன் ராவ் காதலி நதியா வெளியிட்டுள்ள சைபர் புல்லிங் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.